அரசு சாரா நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள்- தன்னார்வ அமைப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது
அடல் வயோ அபியுதய் யோஜனா திட்டத்தின் ஒரு அங்கமான மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை (ஐ.பி.எஸ்.ஆர்.சி) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது, இதன் கீழ் மூத்த குடிமக்கள் இல்லங்களை (முதியோர் இல்லங்கள்) நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் இல்லங்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காக, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:-
இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பணிகளைக் கண்காணிப்பதற்காக அமைச்சகம் திட்டக் கண்காணிப்புப் பிரிவை அமைத்துள்ளது.
இந்த இல்லங்களில் 2020-21-ம் ஆண்டு முதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்த இல்லங்களைப் பற்றிய தகவல்கள் குறித்த காட்சிப்பதிவுகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் பராமரிக்க வேண்டும்;
பொது நிதி விதிகள், 2017-ன் கீழ் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இ-அனுதான் இணைய தளத்தின் மூலம் மானியம் வழங்கும் முறை ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக செயல்படுத்தப்படுகிறது.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்