முத்துமலர் வாழ்க்கையில் புயல் வீச முன்னால் முதல்வர் மகன் காரணமா? உண்மை என்ன.! சேது திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமான பாலா.
முதல் படத்திலேயே தேசிய அளவில் பெயர் தேடிக் கொண்டார். தொடர்ந்து பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப்படக்களை இயக்கி சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ஆறு முறையும், 13 முறை மாநில விருதுகளையும் பெற்றவர். அவரது உறவுக்காரப் பெண் முத்துமலர் 2004 ஆம் ஆண்டு பாலா திருமணம் செய்து கொண்டார். மதுரையில் கோலாகலமாக நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பாலா பழனிசாமி 11 ஜூலை 1966 ல் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், என்டி பட்டி எனும்
நாரயனத்தேவன்பட்டியில் பிறந்தவர் தமிழ்த் திரைப்பட இயக்குநராகும் முன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்ற உதவி இயக்குனராவர். முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்றத் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி காயத்ரி தேவி காவல்துறையில் புகார் அளித்ததுடன் செய்தியாளர்களையும் சந்தித்தார், அவர் திரைப்பட இயக்குநர் பாலா மனைவி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் அருணாசலம் அவரது மகள் காயத்ரி தேவி. சென்னையில் வசிப்பவர் வாழ்வில் விவாகரத்துப் பெற்றவர். 2 குழந்தைகள் உள்ளவர், என்பது விசாரணை மூலம் தெரிகிறது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரான ரவீந்திரநாத் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். சென்னை அருகே ஏகாடூர் பகுதியில் வசித்து வரும் காயத்ரி தேவி தன்னை கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வருவதாக ஓ.பி.ரவீந்திரநாத் மீது புகார் காவல்துறையில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்.,
" 2014 ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகள் கவிதா, அவரது சகோதரர் ரவீந்திரநாத், அவரது மனைவி ஆனந்தி ஆகியோருடன் தனக்கு நட்பு ஏற்பட்டதாகவும், பின்பு ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியுடன் நெருங்கிய தொடர்பிருந்ததெனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ரவீந்திரநாத் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதன் காரணமாக கணவன் மனைவியான ரவீந்திரநாத் மற்றும் ஆனந்திக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட 2022 ஆம் ஆண்டு எனக்கும் எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது.
அதனை அறிந்த ரவீந்திரநாத் அக்டோபர் மாதம் 2022 ஆமாண்டு முதல் தனது நண்பனான முருகன் என்பவர் மூலமாக என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருகிறார், மேலும் அவர் தனது வாட்ஸ் அப் மூலமாக மிக கேவலமாக வார்த்தைகளில் என்னை வர்ணித்து தன்னுடன் வந்து .......உறவு கொள்ள வேண்டுமென வற்புறுத்தி வருகிறார், இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளேன்
இயக்குநர் பாலாவின் முன்னாள் மனைவி மலர் குறித்துப் பேசினார் ரவீந்திரநாத் எம்.பி., எங்களுக்கு குடும்ப நண்பர். கொடைக்கானலில் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தெரியும். கடந்த 10 வருடங்களாக எனக்கு நல்ல குடும்ப நண்பர். அதே போல் அவரின் மனைவி ஆனந்தியும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். எந்த ஒரு குடும்ப பிரச்சினை என்றாலும் அதுபற்றி என்னிடம் அவர்கள் பேசுவது வழக்கமான ஒன்று. .
டைரக்டர் பாலாவின் மனைவி மலர், ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்திரநாத்துக்கும், மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டது. ஒரு நிலையில் மலர் பணத்துக்காக பிளாக்மெயில் செய்வது போல், மருத்துவமனையிலிருந்து கொண்டு நடித்தது மட்டுமின்றி, அவருக்கு ஆதரவாக, ரவீந்திரநாத்திடம் என்னைப் பேசச் சொன்னார்.அவர் நடிப்பதை அறிந்ததும் எனக்கு அவர் மேலிருந்த, மரியாதை போய் விட்டது. இனி உன்னுடைய நட்பே வேண்டாமென மலரிடமிருந்து விலகி விட்டேன். அத்துடன், 'அண்ணா, மலர் உங்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறார்' என ரவீந்திரநாத்திடமும தெரிவித்தேன். அதற்குப் பிறகு தான் எனக்குப் பிரச்சினை வரத்தொடங்கியது.
கடந்த ஆண்டு, ரவீந்திரநாத் போனிலிருந்து, யாரோ ஒருவர் போன் செய்து, போதையில் என்னிடம் தவறாகப் பேசினார். ரவீந்திநாத்திற்கு உன் மீது இஷ்டம் என்று கூறினார். இதுகுறித்து ஆனந்தியிடம் கூறிய போது, யாராவது அவருக்கே தெரியாமல் பேசி இருக்கலாமெனக் கூறினார். இதனால் இந்த விஷயத்தை நான் பெரிதாக்கவில்லை. அதே நேரம் வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த விஷயத்தை ரவீந்திரநாத்திற்கு தெரியப்படுத்தியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து, ஒருநாள் அவரே மிகவும் மோசமாக என்னிடம் வாட்ஸ் அப் காலில் பேசினார். நான் அவரை அண்ணன் என்று தான் கூப்பிடுவேன். ஆனால், அவர் இப்படி பேசியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'நான் பணத்துக்காக எதையும் செய்பவள் கிடையாது. இப்படி தான் வாழவேண்டும் என வாழ்பவள் நான்' என மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அவர் எல்லை மீறும் விதத்தில் 'நீ ......... ஆகணும், நான் வண்டிய எடுத்துட்டு வரேன்' என மோசமாகப் பேசியதால் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை வந்துள்ளது. என்னிடம் அனைத்திற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன" என காயத்ரி தேவி கூறியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதை திசைதிருப்புவதற்காக காயத்ரி தேவியை யாரோ பின்னாலிருந்து இப்படி இயக்குகிறார்களோ என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதன்மூலம் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாலா கடந்த 2004-ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதன் மூலம் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.திருமணத்தின் மீது ஆர்வமில்லாமலிருந்த இயக்குனர் பாலா, குடும்பத்தினரின் வற்புறுத்தலினால், உறவுக்கார பணக்கார வீட்டு பெண்ணான முத்து மலரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் வரும். இதன்காரணமாக பல நேரங்களில் வீட்டுக்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கி விடுவாராம்
தன் மீது இயக்குனர் பாலா துளிஅளவும் பாசம் காட்டாததால் முத்துமலர் மனமுடைந்து போனதாக வெளியில் கூறியுள்ளார் முத்து மலர் அவர் கால்லூரியில் படிக்கும் போதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பண்னீர்செல்வத்தின் மகனான தேனி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத்தைக் காதலித்துள்ளார். இயக்குனர் பாலா உடனான திருமண வாழ்க்கை ஒத்து வராததால், அவர் தனது முன்னாள் காதலனுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளனர் எனத் தகவல் . இது பாலாவுக்கு தெரியவந்து தான் பிரச்சனை ஆகி உள்ளது.இருவர் பக்கமும் தவறு இருக்க அதைத் தொடர்ந்து தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஓ.பி.ரவீந்திர நாத்திற்கு இப் பிரச்சனை வருகிறது காரணம் பல கோடநாடு விவகாரத்தை ஓ.பன்னீர் செலதவம் கையில் எடுக்கும் போதெல்லாம் இந்தப் பெண் விவகாரத்தை ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு கையிலெடுக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு உண்மையோ இது போல பல விவகாரங்கள் இதுவரை விடை காண முடியாமல் உள்ளதில் முன்னால் அமைச்சர் ஜெயமான ஒருவர் மற்றும் கவிப்பேரரசர் ஒருவர் மற்றும் நாமே தமிழாக ஒருவர் என பலரும் அரசியல் நகர்வில் இதுபோல பெண்கள் கலவரம் செய்வது சமீப காலமாக நடக்கும் நிகழ்வாகிறது தான் நமது சந்தேகம், மேலும் பல அரசியல் இந்தக் களம் வாயிலாகப் பேச முடியாதவை மனதையும் மானத்தையும் அடமானம் வைத்தவர்களிடம்
ஒரு போதும் நியாயத்தை எதிர்பார்க்காதிர்கள். இது அரசியல் களம் இது அரசியல் யுத்தம். அம்புகள் எந்தப்பக்கமிருந்தும் வரலாம் என்ஒது தான் பொது நீதி. புகாருக்கு காரணமாக இருந்தவரை மட்டுமே விசாரணை செய்யாமல், புகார் கொடுத்தவரும் விசாரிக்கப்பட வேண்டியவரே என்பது தான் தற்போதய அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
கருத்துகள்