மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒற்றை ரயிலாக இணைப்பு
மதுரை-குருவாயூர் இடையே புதிய சேவை இயங்கும்
தற்போது, தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் –புனலூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் , மதுரை - செங்கோட்டை -மதுரை எக்ஸ்பிரஸ் ,செங்கோட்டை - கொல்லம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27ந்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ந்தேதியன்றும் தனது சேவையைத் தொடங்கும்.
ரயில் எண். 16327 மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து 27ந்தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை அடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண். 16328 குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் , குருவாயூரிலிருந்து 28ந்தேதி காலை 5.50க்கு புறப்பட்டு, அன்று இரவு 7.50க்கு மதுரை சென்றடையும்.
இந்த ரயில், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கருத்துகள்