காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் போலி பதிவு பத்திரம் இரத்து செய்வதற்கு
ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சம் கேட்டு முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் நேரில் பெறற பதிவுத்துறை ஊழியர் நவீன் குமார் மற்றும் அலுவலக தற்காலிக உதவியாளர் சந்தோஷ்பாபு ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு சிறை சேர்த்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தனது தந்தை சொத்திற்கு குடும்ப உறுப்பினர்களுக்கான அடிப்படையில் பொது அதிகார ஆவணம் பத்மாவதி, அவரது சகோதரர் பச்சையப்பன் ஆகியோருக்கு வழங்கியுள்ளதைத் தொடர்ந்து பச்சையப்பன் போலி ஆவணங்கள் மூலம் இந்தச் சொத்தை அபகரித்து விற்பனை செய்துள்ளாராம் , சில காலத்திற்குப் பின்னர் பத்மாவதியின் மருமகன் உலகநாதன் இந்த மோசடியை அறிந்து அதை இரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். இதில் காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை அனுகி உத்தரவும் பெற்று மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வழங்கிய நிலையில் உத்தரவு வழங்கி திருத்த ஆவணப் பத்திரம் பதிவு செய்வதற்கு மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தின் ஊழியர் நவீன்குமார் ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
அதை கொடுக்க மனமில்லாத பத்மாவதியின் அண்ணன் அன்பழகன் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார் அதன் பேரில் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கூறிய அறிவுரைகளின் படி அவர் கேட்ட லஞ்சத்தின் முன் பணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் தெரிவிப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியபோது, துணைக்கண்காணிப்பாளர் தலைமையிலான ஏழு பேர் குழுவினர்,
நவீன்குமார் கூறிய அறிவுரையின் அடிப்படையில் தற்கால ஊழியராகப் பணிபுரியும் சந்தோஷ்பாபுவிடம் பினாப்தலின் தடவப்பட்ட நிலையில் வழங்கப்படவே அதை மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புத கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் இலஞ்சமாக வாங்கிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்ரூபாய் இரண்டு லட்சம் கேட்டு அதற்கு முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் பரபரபாகப் பேசப்படுகிறது.
கருத்துகள்