முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி-20 தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளராக பிரதமர் கருத்து

புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதற்குப்  பாராட்டு தெரிவித்ததோடு, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக ஜி 20 உறுப்பு நாடுகளுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.


புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தின் டிஜிட்டல் நகலைப் பகிர்ந்து சமூக ஊடக  எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:


"புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்து மற்றும் உணர்வில் ஒன்றிணைந்து, ஒரு சிறந்த, வளமான மற்றும் இணக்கமான எதிர்காலத்திற்குக்  கூட்டாகப் பணியாற்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக  ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு எனது நன்றி."ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தில்லியில் இன்று தொடங்கியது


வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பூசாவில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஐ வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் இந்தியாவின் விவசாயத் திறனை ஜி 20 நாடுகளின் முதல் பெண்மணிகள் மற்றும் தலைவர்களின் மனைவியர் நேரடியாகக் கண்டுணர்ந்தனர். பிரபல சமையல் கலைஞர்கள் குணால் கபூர், அனஹிதா தோண்டி மற்றும் அஜய் சோப்ரா தலைமையிலான சிறுதானியங்களை மையமாகக் கொண்ட நேரடி சமையல் அமர்வு, இந்திய முன்னணி ஸ்டார்ட்அப்களின் அதிநவீன விவசாயத்  தொழில்நுட்பக் கண்காட்சி, இந்திய பெண் வேளாண் சாம்பியன்களுடனான கலந்துரையாடல், 'வேளாண் தெரு ' போன்ற பல கவர்ச்சிகரமான கூறுகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன.


கண்காட்சிப் பகுதிக்குச் செல்வதற்குமுன் பிரமாண்டமான இரண்டு 'சிறுதானிய ரங்கோலிகள்' இடம்பெற்ற ரங்கோலிப் பகுதிக்குத் தம்பதிகள்சென்றனர். சிறுதானியங்கள் மற்றும் உள்ளூர் கலைப் பொருட்களைப் பயன்படுத்தி அழகான கலைப்படைப்புகள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய விவசாய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் "அறுவடையின் நல்லிணக்கம்" என்ற கருப்பொருளை முதல் ரங்கோலி படம் பிடித்தது. இது இந்தியாவின் விவசாய வலிமையை வெளிப்படுத்தியது, விவசாயத்  திறனை மேம்படுத்துவதில் பெண்களின் முக்கிய பங்கை வலியுறுத்தியது. பெண்களின் பல்வேறு விவசாய பங்களிப்புகளை குறிக்கும் உள்நாட்டு பொம்மைகள், சிறுதானியங்கள், கிராமிய சுடுமண் பானைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த வசீகரிக்கும் ரங்கோலி நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக மாறியது. இரண்டாவது ரங்கோலி  "உலகம் ஒரு குடும்பம்" என்ற  இந்தியாவின் கலாச்சார தத்துவத்தை எதிரொலித்தது;  உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தியது. ஒற்றுமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான இந்தியாவின் உலகளாவிய அர்ப்பணிப்பைக் கொண்டாடியது.  விவசாய நாடான இந்தியா, உலகளாவிய உணவுப்  பாதுகாப்பில் முக்கியப்  பங்கு வகிக்கிறது.


கண்காட்சிப் பகுதியில், 15 வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அடித்தள நிலையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் தங்கள் புதுமையான தொழில்நுட்பத்  தீர்வுகளைக் காட்சிப்படுத்தின. பருவநிலைகேற்ற  ஸ்மார்ட் விவசாயம், விவசாய மதிப்புத் தொடரில்  புதுமை, வேளாண் தளவாடங்கள் மற்றும் விநியோகத் தொடர்கள், நீடித்த நுகர்வுக்கான தர உத்தரவாதம் மற்றும் சிறுதானியங்கள்: நீடித்த ஆரோக்கியம், விவசாயத்தை வலுப்படுத்துதல் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும், நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் (எஃப்.பி.ஓ) பல்வேறு உறுப்பினர்கள் 'கூட்டு வேளாண்மை மூலம் கிராமப்புற வளத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் சந்தைப்படுத்தப்பட்ட பலவிதமான உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர்.


'நேரடி சமையல் அமர்வு' பல வகையான சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட சமையல் இன்பங்களைத் தந்தது. சர்வதேச சிறுதானியங்கள்  ஆண்டுக் கொண்டாட்டங்களுடன் இணைந்த இந்த நிகழ்வில் குணால் கபூர், அனஹிதா தோண்டி, அஜய் சோப்ரா ஆகிய மூன்று பிரபல சமையல் கலைஞர்கள் இருந்தனர், அவர்களுடன் ஐடிசி குழுமத்தைச் சேர்ந்த இரண்டு சமையல் வல்லுநர்கள், சமையல்காரர் குஷா மற்றும் சமையல்காரர் நிக்கிதா ஆகியோருடன் இணைந்து, ஐந்து சமையல்காரர்களும் சிறுதானியங்களில் சிறப்பு கவனம் செலுத்தி ஒரு 'முழுமையான உணவை' தயாரித்தனர். இந்த உணவில் சுவையூட்டிகள், சாலட்கள், இனிப்பு வகைகள் ஆகியவை அடங்கும்.


இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) அமைத்த அரங்குகள் மூலம் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சாதனைகளைக்  கண்காட்சி எடுத்துக்காட்டியது. துல்லிய வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரமயமாக்கல் முன்னேற்றங்களில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் துறை வளர்ச்சியை வெளிப்படுத்தின. ஒவ்வொரு அரங்கிலும்  அரசின் ஆதரவுடன் குறிப்பிட்ட பயிர் முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சில முக்கிய அரங்குகள் பாசுமதி புரட்சியின் பயணம், லட்சக்கணக்கான கணக்கான பாசுமதி விவசாயிகளின் செழிப்பில் அதன் பங்கு, 5 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி ஈட்டும் நிலை போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தின. மற்றொரு அரங்கு  இந்தியா "நறுமணப் பொருட்களின் பூமி" என்ற தகுதியை எடுத்துக்காட்டியது. இது இந்திய மசாலாப் பொருட்களின் பரந்த வகைகள்,  உலகளாவிய புகழ் மற்றும் எதிர்கால நோக்கத்தை வலியுறுத்தியது. இன்னொரு அரங்கு காளான்களின் ஊட்டச்சத்து, மருத்துவ முக்கியத்துவம், இந்தியாவில் அவற்றின்  பன்முகத்தன்மை, ஏற்றுமதிக்கான திறன் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது. கூடுதலாக, மதிப்புமிக்க விருந்தினர்கள் ஐ.சி.ஏ.ஆரின் மனம் கவரும் பல காட்சிகளுடன், வாழைப்பழங்களைக் கொண்டுசெல்லுதல்,   சேமித்தல் மற்றும் பழுக்க வைக்கும் போது சுற்றுச்சூழல் நிலைமைகளின் நிகழ்நேர கண்காணிப்பை எளிதாக்கும் சென்சார் அடிப்படையிலான அமைப்பையும் பார்வையிட்டனர்.


'வேளாண் தெரு'  என்பது அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கண்காட்சியின் மற்றொரு முக்கிய அங்கமாகும். இது இந்தியாவின் விவசாய பாரம்பரியத்தை ஈர்க்கும் பயணத்தையும் அதன் துடிப்பான கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவையும் வழங்குகிறது. இங்கு விவசாய நடைமுறைகள் குறித்த விரிவான பார்வை முன்வைக்கப்பட்டிருந்தது. வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தது. இந்தத் தெரு ஒன்பது அரங்குகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் கிராமிய அழகுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  இது ஜி 20 நாடுகளின் தலைவர்களின் மனைவியருக்கு அற்புதமானதொரு  சூழலை உருவாக்கியது. சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விவசாயத்தின் பல்வேறு அம்சங்களையும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முன்முயற்சிகளையும் இது எடுத்துக்காட்டியது. மத்தியப் பிரதேசத்தின் திண்டோரியைச் சேர்ந்த இளம் பெண் விவசாயியான லஹ்ரி பாய், தனது இரண்டு அறைகள் கொண்ட குடிசையில் சுமார் 50 வகையான சிறுதானிய விதைகள் உட்பட 150 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விதை வகைகளைப் பாதுகாத்து இந்தியாவின் 'சிறுதானிய ராணி' என்ற பட்டத்தைப் பெற்றது சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.


நிகழ்ச்சியின் நிறைவில், ஜி 20 நாயகர்கள் ஒரு கூடை வடிவத்தில் பாராட்டுச் சின்னத்தைப் பெற்றனர். இந்தியாவின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் கலைப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தக் கூடையில் இடம்பெற்ற பொருட்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்டன. சத்தீஸ்கரின் சால் காடுகளில் இருந்து பெறப்பட்ட பட்டு மூலம் தயாரிக்கப்பட்ட கையால் நெய்யப்பட்ட ஆடை, ஹரப்பா நாகரிகத்தின் (கிமு 3300 முதல் கிமு 1300 வரை) புகழ்பெற்ற 'நடனமாடும் பெண்' கலைப்பொருளுக்குப் பயன்படுத்தப்பட்ட மறைந்துபோன பண்டைய முறையை நினைவூட்டும் வகையில் மெழுகு நுட்பத்தைப் பயன்படுத்தி  கையால் வடிவமைக்கப்பட்ட உலோக மணி, புராணக் காட்சிகளைக் கொண்ட செரியல் ஓவியம் ஆகியவை இதில் அடங்கும்.


சிறுதானிய விவசாயம் உட்பட விவசாயத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த புரிதலை முதல் பெண்மணிகள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கைத் துணைவியருக்கு இந்தப் பயணம் வழங்கியது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், அசாம் ஆகிய உற்பத்தி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 100 பெண் விவசாயிகளுடன் உரையாடியபோது, நாட்டில் வளர்ந்து வரும் சிறுதானிய மதிப்புத் தொடர் பற்றி முதல் பெண்மணிகளும் தலைவர்களின் வாழ்க்கைத் துணைவியரும் அறிந்து கொள்ள முடிந்தது. புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள்  சிறப்பு விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் மற்றும் இந்திய உணவு வகைகளின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்ட  ஒரு குறிப்பிடத்தக்க விருந்தினை ஏற்பாடு செய்தனர். அதே நேரத்தில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (எஃப்.பி.ஓ) தங்களின் அண்மைக்கால  தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி, கலந்துகொண்ட அனைவருக்கும் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கின.ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனம்




இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி 20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனத்தை இங்கே அணுகலாம்:

https://mea.gov.in/bilateral-documents.htm?dtl/37084/G20_New_Delhi_Leaders_Declaration.                                              ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் 

நண்பர்களே,

இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பல முக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன.

'ஜனநாயகத்தின் தாய்' என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமது நம்பிக்கை காலங்காலமாக அசைக்க முடியாதது. 'உலகம் ஒரு குடும்பம்' என்று பொருள்படும் 'வசுதைவ குடும்பகம்' என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நமது உலகளாவிய நடத்தை வேரூன்றியுள்ளது.

உலகை ஒரே குடும்பமாகக் கருதும் இந்த எண்ணமே, ஒவ்வொரு இந்தியரையும் 'ஒரே பூமி' என்ற பொறுப்புணர்வுடன் இணைக்கிறது. 'ஒரே பூமி' என்ற உத்வேகத்துடன்தான் இந்தியா 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முன்முயற்சி மற்றும் உங்கள் ஆதரவால், பருவநிலை பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஏற்ப, இந்த ஆண்டு முழு உலகமும் 'சர்வதேச சிறுதானிய ஆண்டை' கொண்டாடுகிறது. இந்த உத்வேகத்திற்கு ஏற்ப, இந்தியா 'பசுமை தொகுப்பு  முன்முயற்சி - ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு ' என்ற திட்டத்தை சிஓபி -26 இல் தொடங்கியது.







இன்று, பெரிய அளவிலான சூரியப் புரட்சி நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக நிற்கிறது. லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்தை தழுவியுள்ளனர். இது மனித ஆரோக்கியத்தையும் மண் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு பெரிய பிரச்சாரமாகும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்' என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். இந்தியாவின் ஜி-20 மாநாட்டின் போது, உலகளாவிய ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

நண்பர்களே,

பருவநிலை மாற்றத்தின் சவாலை மனதில் கொண்டு, ஆற்றல் மாற்றம் 21 ஆம் நூற்றாண்டின் உலகின் குறிப்பிடத்தக்க தேவையாகும். அனைவரையும் உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் தேவை. இயற்கையாகவே, வளர்ந்த நாடுகள் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டில், வளர்ந்த நாடுகள் ஒரு சாதகமான முன்முயற்சியை எடுத்ததில் இந்தியாவுடன், உலகளாவிய தெற்கில் உள்ள அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியடைகின்றன. வளர்ந்த நாடுகள் முதல் முறையாக பருவநிலை நிதிக்காக 100 பில்லியன் டாலர் என்ற தங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்துள்ளன.

'பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை' ஏற்றுக்கொள்வதன் மூலம், நிலையான மற்றும் பசுமை வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை ஜி -20 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நண்பர்களே,

கூட்டு முயற்சியின் உத்வேகத்துடன், இன்று, இந்த ஜி -20 மேடையில் இந்தியாவுக்கு சில பரிந்துரைகள் உள்ளன.

எரிபொருள் கலப்புத் துறையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய தேவையாகும். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை கொண்டு செல்ல உலக அளவில் முயற்சி எடுப்பது எங்கள் திட்டம். 

அல்லது மாற்றாக, பெரிய உலகளாவிய நன்மைக்காக மற்றொரு கலப்பு கலவையை உருவாக்குவதில் நாம் பணியாற்றலாம், இது ஒரு நிலையான ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் காலநிலை பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது.

இந்த சூழலில், இன்று, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குகிறோம். இந்த முயற்சியில் இணையுமாறு இந்தியா உங்கள் அனைவரையும் அழைக்கிறது.

நண்பரக்ளே,

சுற்றுச்சூழலை மனதில் கொண்டு, கார்பன் கிரெடிட் குறித்த விவாதங்கள் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. கார்பன் கிரெடிட் என்ன செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது; இது ஒரு எதிர்மறை கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, என்ன சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பெரும்பாலும் போதுமான கவனம் பெறுவதில்லை. நேர்மறையான முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை.

கிரீன் கிரெடிட் நமக்கு முன்னோக்கிய வழியைக் காட்டுகிறது. இந்த நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்க, ஜி -20 நாடுகள் 'பசுமை கடன் முன்முயற்சி'யில் செயல்படத் தொடங்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

நண்பர்களே,




இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் வெற்றியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதிலிருந்து பெறப்படும் தரவுகள் மனிதகுலம் முழுமைக்கும் பயனளிக்கும். அதே உத்வேகத்துடன், 'சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்புக்கான ஜி 20 செயற்கைக்கோள் மிஷன்' ஏவ இந்தியா முன்மொழிகிறது. 

இதிலிருந்து பெறப்படும் பருவநிலை மற்றும் வானிலை தரவுகள் அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த முயற்சியில் இணையுமாறு அனைத்து ஜி-20 நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுக்கிறது.

நண்பர்களே,

மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துகளும்.

இப்போது, உங்கள் எண்ணங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

பொறுப்பு துறப்பு - இது பிரதமர் அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசல் அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டதுஇன்று உலகம் இந்தியாவை சமமான கூட்டு நாடாக பார்க்கிறது : டாக்டர் ஜிதேந்திர சிங்

அனைத்து வகையான சர்வதேச ஒத்துழைப்பிலும் இந்தியாவை சமமான கூட்டு நாடாக  உலகம் இன்று பார்க்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், விண்வெளி மற்றும் அணுசக்தி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உலகின் மூத்த அரசுத் தலைவராக உள்ளார், மேலும் ஒவ்வொரு அரசுத் தலைவர்களும் மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

பிரபல  பத்திரிகை ஒன்றுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்த பிரத்யேக பேட்டியில், "நாம் இப்போது பெரும்பாலான நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளோம். ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின் சிறந்த பகுதி என்னவென்றால், நாம் இனி  சமமான கூட்டு நாடாக  இருக்கிறோம், பல வழிகளில், சமமானவர்கள். எடுத்துக்காட்டாக, விண்வெளித் துறையில், நாம் நமது  சேவைகளை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு வழங்குகிறோம்... நாம் ஏற்கனவே 170 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், 250 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும் சம்பாதித்துள்ளோம். நாங்கள் இப்போது 8 பில்லியன் டாலர் (ரூ.66,000 கோடி) விண்வெளி வர்த்தகம் செய்கிறோம். ஆனால் நாம் வளர்ந்து வரும் வேகத்தில், இந்தியா 2040 ஆம் ஆண்டில் 40 பில்லியன் டாலராக (ரூ.3.3 லட்சம் கோடி) உயரக்கூடும், அதே நேரத்தில் சமீபத்திய சர்வதேச அறிக்கையான ஏ.டி.எல் அறிக்கை, நாம் 100 பில்லியன் டாலர் வரை கூட செல்லக்கூடும் என்று கூறுகிறது, "என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும், இனி முழு வளர்ச்சியும் பெரும்பாலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார், பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, பெரும்பாலான இருதரப்பு ஒப்பந்தங்கள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் இருந்து இது தெளிவாகிறது.

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான 'ககன்யான்' இஸ்ரோவின் அடுத்த பெரிய திட்டமாகும். "இஸ்ரோவின் மிகவும் லட்சியமான நோக்கத்தை நிறைவேற்ற நாடு முழுவதும் உள்ள அதன் பல்வேறு ஆய்வகங்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன: மூன்று இந்திய விண்வெளி வீரர்களை உள்நாட்டிலேயே 'மனிதர்களை ஏற்றிச் செல்லும் தகுதி வாய்ந்த' ராக்கெட் லாஞ்சர் மற்றும் குழு தொகுதியை உருவாக்கி அவர்களை விண்வெளிக்கு பறக்கவிட்டு பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வர வேண்டும்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறினார்.

இந்திய விமானப்படை விமானிகள் 3 பேர் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் விண்ணில் ஏவப்பட்டு பின்னர் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் வாழ்வதற்காக கடுமையான பயிற்சி பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.

2020 ஆம் ஆண்டில் இஸ்ரோவுக்கு பதிலாக ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்க தனியார் தொழில்துறைக்கு விண்வெளித் துறையைத் திறக்க பிரதமர் மோடி எடுத்த முடிவை டாக்டர் ஜிதேந்திர சிங் ஒரு "மாற்றத்தின் திறவுகோல்" என்று அழைத்தார்.


இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  ஆதித்யா-எல் 1, ககன்யான் மற்றும் வீனஸ் ஆர்பிட்டர் தவிர, தனியார் துறையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஏவுதல்களைக் கொண்டிருக்கப் போகிறோம். விண்வெளித் துறையை முழுமையாகத் தனியாருக்குத் திறந்துவிடும் துணிச்சலான முடிவை பிரதமர் எடுத்த பிறகு இதுவும் நிகழ்ந்தது. இதன் விளைவாக, நமது விண்வெளி பயணங்களில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, "என்று அவர் மேலும் கூறினார்.

"இது மிகவும் முற்போக்கான சிந்தனையாகும், ஏனென்றால் இனிமேல், நாம் முன்னேற வேண்டும் என்றால், நாம் முழுமையாக முன்னேற வேண்டும். அரசு வளங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. நமக்கான உலகளாவிய பங்கை நாம் காட்சிப்படுத்த வேண்டும் என்றால், உலகளாவிய உத்தியுடன்  உலகளாவிய அளவுருக்களுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும். இதைத்தான் அமெரிக்கர்கள் செய்கிறார்கள்; நாசா இப்போது அரசாங்க வளங்களை சார்ந்திருக்கவில்லை, "என்று அவர் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நாடாளுமன்றத்தின் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட 'அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை' (என்.ஆர்.எஃப்) ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சமமான நிதி மற்றும் வளங்களை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இப்போது, தனியார் தொழில் முதலீட்டுக்கு கூடுதலாக, ரூ .50,000 கோடி செலவழிக்க ஒதுக்கும் சட்டத்தை உள்ளடக்கிய இந்த முழு சுற்றுச்சூழல் அமைப்பும் நம்மிடம் உள்ளது, இதில் ரூ .36,000 கோடி அரசு சாரா துறையிலிருந்து வருகிறது," என்று அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...