ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது
அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திராவில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தம்
தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
திருப்பதி செல்வதற்காகச் சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்காக பேருந்துக்குக் காத்திருப்பு
வேலூர், திருப்பத்தூரிலிருந்து ஆந்திரப்பிரதேசத்திற்கு இயக்கப்படும் இரு மாநிலப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டது
நேற்று அதிகாலை ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது காவல்துறை அவர் மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது பதிவு செய்யப்பட்டிருந்த ஊழல் வழக்கில் விசாரணை நடந்த நிலையில் நேற்று அதிகாலை கைது செய்தனர். நந்தியா் பகுதி டிஐஜி தலைமையில் அதிக அளவிலான காவலர்கள் நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர்.
ஆனால் வீட்டின் முன்பு கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருப்பதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாதென எஸ்பிஜி படையினர் தெரிவித்ததையடுத்து அங்கு காத்திருந்த காவலர்கள் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்குக் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான வழக்கு 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் நந்தியாலா நகரில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வேனில் ஓய்வு எடுத்திருந்தார். அப்போது அவருக்கு சம்மன் வழங்கப்பட்டதையடுத்து என் வாகனத்தில் வருகிறேன்,
உங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறேன் என்றார். அண்மையில் சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டத்தில் பேசிய போது இன்னும் ஓரிரு நாட்களில் நான் கைது செய்யப்படுவேன் இல்லாவிட்டால் தாக்கப்படுவேன் எனவும் கூறியிருந்தார். இந்த ஆண்டு ஆந்திரப்பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வராக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது மக்களின் பணத்தை கொள்ளையடித்தார் என ஆந்திரப் பிரதேச சமூகநலத் துறை அமைச்சர் மெருகா நாகார்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார்.
கருத்துகள்