மகளிர் உதவித் திட்டம் ஆயிரம் வந்ததும் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சத் தொகை பிடித்தமாகவே மக்கள் சீற்றம்
கல்வியை மருத்துவத்தை, மின்சாரத்தை இலவசமாக வழங்கினால் அடித்தள மக்கள் வாழ்வாதாரம் செழிப்பாகும் ஆனால் மாதம் ஆயிரம் வாங்கும் எந்தக் குடும்பமும் நிரந்தரமாக முன்னேறப் போவதில்லை என்பது மட்டும் உண்மை ஆனால், இதனால் தமிழ்நாடு அரசு பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் நிலை .
இதைச் சரிக்கட்ட, எந்த வழியிலாவது, 1000 வாங்கும் குடும்பம் மற்றும் வாங்காத குடும்பம் எனப்பாராமல் எல்லாக் குடும்பத்திலி ருந்தும், மாதம் ரூபாய் 2000 எந்தவகையிலாவது சுரண்டப்படும் என்பதே சுற்றுப் பொருளாதாரம் .ஆயிரம் ரூபாய் மாநில அரசு தந்தது.
ஆயிரம் வந்த உடனேயே வங்கிக் கணக்கில் குறைந்த பட்சத் தொகை இல்லை என வங்கியில் தண்டனையாக 937 ரூபாயை எடுத்துக் கொண்டது.
பாவம் வக்கியில் கடன் பெற்று தலைமறைவாகி பின் தள்ளுபடி கேட்கும் பாவிஸ்ட்டுகளுக்குக் கொடுக்க வேண்டுமே..ம போச்சே”.. வந்தவுடன் மாயமான ரூபாய்.1000 மகளிர் உரிமைத் தொகை.. என அதிர்ச்சியான பெண்கள்! வேலையை காட்டிய வங்கிகள் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 பணம் வங்கிக் கணக்கில் வந்துள்ள நிலையில், அந்தப் பணம் சில நிமிடங்களிலேயே மாயமானதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் என்ன நடந்தது? விரிவாகவே பார்ப்போம். செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய்.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் தொகையை பெற தகுதியான பெண்கள் யார் என ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்ததன் அடிப்படையில் இதற்கான முகாம்கள் நடைபெற்றன. ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி வரை முதல் கட்ட முகாம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி வரை 2 வது கட்ட முகாமும் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட முகாம்களிலும், விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது,
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடமுள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடமுள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதிபெறாத விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. கடந்த 14 ஆம் தேதியே பலரது வங்கிக் கணக்கிற்கு ரூ.1 அனுப்பி பரிசோதிக்கப்பட்டபின்னர் ரூபாய்.1000 பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கருத்துகள்