முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி வைத்த ஒரே குற்றச்சாட்டுக்கு இரு வேறு வழக்குகளா என்பதே அரசியல் களம்

என்னைத் திருமணம் செய்தார்


வீடியோ அனுப்பி மிரட்டுகிறார்




திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின்  கூடுதல் நீதிபதி முன் நடிகை விஜயலட்சுமி 3 மணிநேரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 161 ன் படி வாக்குமூலம்: வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் காவல்துறை தீவிர ஆலோசனை செய்த நிலையில் வழக்குப்பதிவு

தன்னைத் திருமணம் செய்த பிறகு தற்போது அவரது கட்சியினர் மூலம்  சீமான் மிரட்டி வருகிறார் என திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகி 3 மணி நேரம்  வாக்குமூலம் அளித்தார்.

பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி,                                   பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சீமான் இயக்கத்தில் 'வாழ்த்துகள்'  திரைப்படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்தார். அதனால் இயக்குநரும் நடிகருமான  சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் 



சீமான் விஜயலட்சுமியை மதுரை மீனாட்சி யம்மன் கோவிலில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும்  இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் . அதன் காரணமாக, தனக்கு மிகவும் பெரிய கஷ்டம் ஏற்பட்டாகவும்  எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில்  நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரின் படி, சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில்  அப்போதே சீமான் மீது ஐபிசி 417, 420, 354, 376, 506(1) மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்தனர்.

ஆனால், அப்போது அதிமுக ஆட்சி என்பதால் சீமான் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமானுக்கு எதிராக பல போராட்டங்களை  நடத்தியதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சூழலில் விஜயலட்சுமி  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையிலிருந்த போது நடிகை விஜயலட்சுமியிடம் அவரது தற்கொலை முயற்சி குறித்து மாஜிஸ்திரேட் வாக்குமூலமும்  பெற்றார். அப்போதும் அதிமுக ஆட்சி என்பதால் திருவான்மியூர் காவல் நிலையத்தில்  சீமான் மீது நடவடிக்கைகள்  எடுக்கவில்லை. என்பதாலும்.


நிலைமை கைமீறிச் செல்வதால், நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் நடத்தும்  நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் என்பவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மாதம் ரூபாய் .50 ஆயிரம் தருவதாகவும், நடிகை விஜயலட்சுமியை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்க்கை நடத்துவதாக சீமான் கூறியதாகச்  சமாதானம் செய்துள்ளார் எனவும் அதன்படி  2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீமான் தரப்பு சொன்னபடி மாதம் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளதாகவும்  அதற்குப் பிறகு பணம் அனுப்பவில்லை. எனவும் 

அது குறித்து நடிகை விஜயலட்சுமி கேட்ட போது, மதுரை செல்வம் மூலம் சீமான் ஒரு வீடியோ அனுப்பி மிரட்டியதாகவும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில் . அதிர்ச்சியடைந்த நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம்  28 ஆம் தேதி இயக்குனர் சீமான் மீது மீண்டும் புகாரளித்தார். புகாரின் படி விசாரணை நடத்த இராமாபுரம் காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டதன் படி தற்போது இராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை  விஜயலட்சுமியளித்த புகாரின் மீது இரண்டு தினம் முன்பு முதல் விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்டமாக நடிகை விஜயலட்சுமியை இராமாபுரம் காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து 8 மணி நேரம் விசாரணை நடத்திய போது, அவர், இயக்குனர் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறியுள்ளார். அதேநேரம், சீமான் மதுரையில் தங்கி இருந்த போது விஜயலட்சுமிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரழைத்த ஆதாரங்கள், பணம், நகைகள் கொடுத்த ஆதாரங்கள், சீமான் தரப்பில் ஒவ்வொரு மாதமும் அளித்த பணத்திற்கான வங்கிக் கணக்கு ஆதாரங்களை அவர் அங்கு  சமர்ப்பித்துள்ளதாகவும்.



அத்தோடு இல்லாமல், சீமானுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்கம் மற்றும் பணம் அதிகளவில் வந்ததற்கான பல ரகசியங்களையும் நடிகை நவிஜயலட்சுமி விசாரணையின் போது வாக்குமூலமாக அளித்ததாகத்  தெரிகிறது . இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சீமான், இயக்குநரா


க இருந்தாலும், அவர் தற்போது தனியாகக் கட்சி நடத்தி வருகிறார். இதனால் அவர் மீது காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், காவல்துறையினர்  தங்களிடம் அளித்த வாக்குமூலத்தை திருவள்ளூர் குற்றவியல் நடுவரான நீதிபதி முன்பு  நடிகை விஜயலட்சுமி நேரில் பதிவு செய்ய நடவடிக்கையும்  எடுத்தனர்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு ஆஜராகி நடிகை விஜயலட்சுமி நேற்று முன் தினம் மதியம் 1.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி முன்பு அவர், சீமானுடன் எந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது உடனிருந்த நபர்கள் யார் யார்? இருவரும் தங்கி இருந்த மதுரையில் உள்ள 3 நட்சத்திர தங்கும்  விடுதி  விவரங்கள், சீமானால் நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகளுக்கான மருத்துவ ரசீதுகள் என அவரிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் நீதிபதியிடம் அளித்ததாகவும், தன்னை நீதிமன்றத்திற்கு செல்லாதபடி இயக்குநர் சீமான் பல வழிகளில் தடுத்ததாகவும் அவர் நீதிபதியிடம் குற்றச்சாட்டாக கூறியதாகத்  தெரிகிறது



அப்போது கூடுதல் நீதிபதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய ஆவணங்களுடன் நடிகை  விஜயலட்சுமி பதில் அளித்தாகவும், தற்போது மதுரை செல்வம் மூலம் அனுப்பிய வீடியோவையும் ஆதாரமாக அளித்ததாகவும்  தெரிவித்த நிலையில்

கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அதாவது 3 மணி நேரம்  நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து காவல்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர்.




சீமானுக்கு எதிராக வலுவான ஆதாரங்களுடன் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியிடம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளதால், சீமான் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால் ராமாபுரம் காவல்துறையினர்  சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்  பிறகு நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது.

மேலும் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமலிருக்க திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா மற்றும் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பிரபல திரைப்பட இயக்குநரும், அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு பிரசாரம் செய்யும்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று சீமான் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூருக்கு சென்றிருந்தார். சம்மனை அவரிடம் வழங்க ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையிலான 3 காவலர்கள்  காரில் ஈரோட்டிலிருந்து திருப்பூருக்குச் சென்றனர். அங்கு அவினாசி ரோட்டிலுள்ள ஒரு ஹோட்டலிலிருந்த. இயக்குநர் சீமானிடம் காநல்துறையினர் சம்மனை வழங்கினர்.


இந்த நிலையில் சீமான் திருப்பூரில் நிருபர்களைச் சந்தித்தபோது நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து கேட்டனர். அதற்கு அவர் ''என் மீதான அக்கறையில் இதை கேட்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. உன் மேல் வைக்கிற குற்றச்சாட்டு, விமர்சனம் உண்மை இல்லை என்றால் அதற்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை என்பது எனது கருத்து. ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டு புருஷனோட வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, நான் சமூகத்திடம் அந்த பெண் என்னை ஏமாற்றிவிட்டு போனது என்று சொன்னால் என்னை நீங்க காரித்துப்ப மாட்டீங்க. அதை ஏன் எல்லாரும் ரசிக்கிறீங்க? எனக்கு குடும்பம் இருக்கிறது. 2 பிள்ளைங்க இருக்கிறார்கள். ஒரு கனவு இருக்கிறது. யார் மனு கொடுத்தாலும் விசாரிக்க வேண்டியது காவல்துறை கடமை. அதை அவர்கள் செய்வார்கள். உண்மையிலேயே நான் குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று தான் சொல்கிறோம். அதற்குப் பயப்படுகிற ஆள் இல்லையே நான். என்ன வேறு ஊருக்கு ஓடிப்போயிட்டேனா? தேர்தல் வருவதால் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்'' என்றும் நான் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு வருகிறேன். நீங்கள் 2 லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள்! -என்றார் சீமான்!

எத்தனை லட்சுமிகளை வைத்து அவதூறு பரப்பினாலும் அண்ணனை எதுவும் செய்ய முடியாது! எனத் தெரிவித்தவர் மற்றொரு வேறு ஒரு இடத்தில் உள்ள அவரது பதிவில் 

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக நேரடியாகக் களம் கண்டால், நாம் தமிழர் கட்சி அங்கு போட்டியிடாது. திமுகவுக்கு ஆதரவளிக்கும்: என கோயமுத்தூரில் சீமான் அளித்த பேட்டியைக் காணும் போது அவரது தடுமாற்றம் தெரிகிறது இதில் மக்களால் பேசி விவாதிக்கப்படும் அறியாத பொது நீதி உண்மை தெரிந்த அரசியல் அறிந்தவர்கள் பார்க்கும்  பொதுநீதி என்பது  இருவேறு இது நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது ?

நடிகரும் இயக்குநருமான நாம்தமிழர் கட்சி சீமான் மீது புகார் வழங்கிய உடனேயே திருவள்ளூர் மகளிர் நீதிபதியிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் நடிகை விஜயலெட்சுமி தருகிறார். காவல்துறை ஊட்டி விரைகிறது என்கிறார்கள். ஆனால் முன்னால் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் நடிகை விஜயலெட்சுமி கொடுத்த புகாரில் சீமான் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கின் நிலை தற்போது என்ன என்பது இங்கு உற்று நோக்குவது  சட்டம் அறிந்த நபர்களின் பணியாகும்,  ஒரே குற்றச்சாட்டுக்கு இருவேறு வழக்குகள் எப்படி வரும் என்ற வினா ? இணிமேல் எழும், அதற்கு அதை மேலெடுத்துச் செல்ல  நாம் தமிழர் கட்சியில் சட்ட வல்லுநர்கள் இல்லை போல என்பது இங்கு நமது  பார்வையில் தெரியும் 


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு அரங்கக் கூட்டத்தில் பேசியது ஒரு இரவிலேயே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கூறுகிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புகார் தருகிறார்.

நடிகரும் இயக்குநருமான அரணையூர் செபஸ்தியான் சைமன் என்ற சீமான் நடத்தும் நாம் தமிழர் என்ற காலம்சென்ற சி.பா    ஆதித்தனார் வளர்த்த அதே பெயர் உள்ள கட்சி மூன்றாவது நான்காவது கட்சியாக இருந்த நிலையில்  அது இரண்டாவது கட்சியாக மாறுவதை அதிமுகவின் எடப்பாடி கே.பழனிச்சாமியோ அல்லது பாஜகவோ விரும்பவில்ல. காங்கிரஸ் சார்ந்த இந்தியா கூட்டணியில் வலுவாக திமுக இருப்பதால் இதற்கு முட்டுக்கட்டை போட பாஜக விரும்புகிறது என்பது மட்டும் புரிகிறது . ஆனால் அரசின் உளவுத்துறையை விட பா ஜ கவிற்கு வேலை செய்வது யார்? இங்கு 

என்னதான்  நடக்கிறது? என்பது மக்கள் அறிவதே இங்கு பொது நீதியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம