காரைக்குடியில் காவல் தெய்வமாக கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது.
நாட்டார் மற்றும் நகரத்தார் உருவாக்கிய ஆலயம் தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்ட கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விழாத் தொடங்குகியது. மறுநாள் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடந்தது. செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி மாலை முதற்கால யாக பூஜை பூர்ணாகுதியும், 2-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலைப் பூஜையும், மாலை 3-வது கால யாகசாலைப் பூஜையுடன், பூர்ணாகுதி, தீபாராதனைகளுடன் விழா நடந்தது.
செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி காலையில் 4-வது கால யாகசாலைப் பூஜைகள், பூர்ணாகுதி மற்றும் தீபாரதனையும், மாலையில் 5-வது கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாரதனை நிகழ்ச்சியும் நடந்தது.செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி காலை 6-வது கால யாகசாலைப் பூஜை மற்றும் பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9.15 மணிக்கு யாகசாலைக் கடம் புறப்பாடு, காலை 9.30 மணி முதல் 10.15 மணிக்குள் கோவில் கோபுரங்களின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும் கருடன் வருகை தந்து பக்தர்கள் கூட்டம் அருள் பெற இனிதாய் நடந்தது. இரவு 8 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்பாள் புறப்பாடு திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் உள்ளிட்ட இராமநாதபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் இணைந்து செய்தனர். சுவாமிகளின் உருவச் சிலைகளுக்கு மருந்து சாத்தப்படாத நிகழ்வு ஆகமவிதி மீறலாகவே பார்க்கப்படுகிறது. சிவன் ஸ்தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருப்பது போல் அம்மன் ஸ்தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்கிறார். தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோவிலில் அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.
பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் இடதுகையில் அருள்பாலிக்க.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்திலுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள அருள்மிகு வெட்டுடையாள் காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்க.
சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்க.
கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் வெகு சில மட்டுமே
கருத்துகள்