விண்வெளி பற்றி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
வதோதராவில் உள்ள இந்திய ரயில்வேயின் விரைவு சக்தி பல்கலைக்கழகம் (ஜி.எஸ்.வி), ஏர்பஸ் ஆகியவை கையெழுத்திட்டன.
வதோதராவில் உள்ள இந்திய ரயில்வேயின் விரைவு சக்தி பல்கலைக்கழகம், ஏர்பஸ் ஆகியவை இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை கணிசமாக வலுப்படுத்த கைகோர்த்துள்ளன. புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் திரு.ரெமி மைலார்ட் (ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்), பேராசிரியர் மனோஜ் செளத்ரி (விரைவு சக்தி பல்கலைக்கழக துணைவேந்தர்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் , விரைவு சக்தி பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தருமான திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ஜெய வர்மா சின்ஹா மற்றும் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏர்பஸ் உலகின் மிகப்பெரிய வணிக விமான உற்பத்தியாளராகவும், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்களின் முன்னணி உற்பத்தியாளராகவும் உள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்தியாவுடன் நீண்டகால உறவு உள்ளது. நிறுவனம் இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்தின் முக்கிய இயக்கியாகவும், தவிர்க்க முடியாத திறமை மற்றும் வள மையமாகவும் அங்கீகரித்துள்ளது. மேலும் நாட்டில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட விண்வெளிச் சூழல் அமைப்பை உருவாக்கத் தேவையான அனைத்துக் கட்டுமான வசதிகளையும் அமைத்துத்தர உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனத்தின் வர்த்தக உத்தியின் மையமாக இந்தியாவில் உற்பத்தி உள்ளது. இந் நிறுவனம் அதன் உலகளாவிய தயாரிப்புகளில் இந்தியாவின் பங்களிப்பை சீராக அதிகரித்து வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், "ஜி.எஸ்.வி தீவிரமான தொழில்-கல்வி கூட்டாண்மையில் கவனம் செலுத்தும். அதன் அனைத்துப் படிப்புகளும் தொழில்துறையுடன் இணைத்து வடிவமைக்கப்படும். ஜி.எஸ்.வி.யில் படிக்கும் மாணவர்கள் தொழில்துறைக்கு தயாராக இருப்பார்கள். போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் வேலைவாய்ப்புக்காக அவர்கள் மிகவும் விரும்பப்படுவார்கள். ஏர்பஸ் உடனான இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த இலக்கை அடைவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகும்" என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரெமி மைலார்ட், "இந்தியாவில் விண்வெளிச் சூழல் அமைப்பை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள ஒரு நிறுவனம் என்ற முறையில், மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் உணர்கிறோம். விரைவு சக்தி பல்கலைக்கழகத்துடனான கூட்டாண்மை நாட்டில் திறமையான பணியாளர்களின் வலுவான சூழலை உருவாக்கும், இது வேகமாக வளர்ந்து வரும் விண்வெளித் துறைக்கு சேவை செய்ய எதிர்காலத்தில் தயாராக இருக்கும்" என்றார்.
இந்தத் தொழில்துறை-கல்விக் கூட்டாண்மை தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஏர்பஸ் இந்திய விமானங்களில் 15,000 மாணவர்கள்பணியமர்த்தப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்