செய்தியாளர் ஆர்.சரத்பவார் : மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி மாணவன் சிகையைத் திருத்த சொன்ன தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை..
நல்ல ஆசிரியர் கிடைக்க மாணவர்கள் தவம் செய்ய வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்கள் கிடைக்க ஆசிரியர்களும் தவம் செய்ய வேண்டும், அது கடந்த காலத்தில் ஆசான் சீடர் உறவு மேன்மையானது, உ.வே.சாமிநாத ஐயருக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை போல கிட்டினால் தான் நிறைவான திறன் படைத்த மாணவர்கள் வரமுடியும் ஆனால் இப்போது 70 ,,சதவீதம் நல்ல ஆசிரியரும் இல்லை நல்ல மாணவர்களும் இல்லை
புதுக்கோட்டை நகரில் மசுவாடி பகுதி அரசினர் மாதிரிப் பள்ளியில் படித்த இரண்டு முடியை வளர்த்து புள்ளிங்கோ எனும் குருவி மண்டை போல செய்தவர்கள் மொத்தம் மாணவர்கள் 800 க்கும் மேல் படிக்கும் பள்ளியில் நேற்றுக் காலை தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் அகியோர் மாணவர்களை தலை முடியை வெட்டிச் சீர்திருத்தம் செய்து ஒழுங்காகப் பள்ளிக்கு வர வேண்டும் எனப் பலமுறை அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை கோபமாகப் பேசியும் திருத்துவதற்கு முயற்சித்து வந்த தலைமை ஆசிரியர்- மற்றும் துணை ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் அந்த குருவி மண்டை மாணவரை நேற்று காலை முடி வெட்டாமல் பள்ளிக்கு வர வேண்டாமெனக் கூறி அறிவுரை வழங்கி சில வார்த்தைகளைக் கூறியும் திட்டியதால் திருந்தாத அந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் அவர் 12.ஆம் வகுப்பில் படிக்கும் மாதேஸ்வரன் என்ற மாணவர் அதே பள்ளியின் பின்புறம் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ள நிலையில் பொதுமக்களின் தகவல் புகாரின் பேரில் காவல்துறை வந்த நிலையில் போராட்டமும் நடந்தது பின் இறந்தவரின் புருக்கோட்டை உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மர்மமான முறையை இறந்தவரின் உடலை பரிசோதனையில் கண்டறிய உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் தரக்கோரித் தான் இந்த சாலை மறியலில் அப்பகுதி மாணவர் உறவினர்கள் ஈடுபட்டனர்
இதற்காக காவல்நிலைத்தில் விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையிலும் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது இதற்காக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் தலைமறைவான நிலையில் உடனடியாகக் கைது செய்யவும் கோரி அந்த மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... நாற்பது ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் சர்வநாசமாகி தனியார் பள்ளிகள் செழித்துக் கொழிக்கின்றன என்பதற்கான சான்றே இது தான்.
ஆசிரியர்கள் கண்டிக்காமல் அல்லது திட்டாமல் எப்படி பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க இயலும்? இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புக் கோரி பெருந்திரள் முறையீடு செய்ய ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது
மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்களைக் குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவதைக் கைவிட வேண்டும் எனவும்,
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கிட வேண்டும் எனவும்
பள்ளிகளில் சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் உருவாக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தி இன்று புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது
என அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அநீதிகளுக்கு எதிராய் அணி திரள்வோம் எனவும்
ஆசிரியர் பேரினத்தை பாதுகாப்போம் எனவும்
உணர்வுகளாய் ஒன்று கூடுவோம் வாரீர் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
கருத்துகள்