டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததுடன், நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது.
விவசாயத்தில் தனது புரட்சிகரமான பங்களிப்புகளைத் தாண்டி, டாக்டர் சுவாமிநாதன் கண்டுபிடிப்புகளின் மையமாகவும், பலருக்கு ஊக்குவிக்கும் வழிகாட்டியாகவும் இருந்தார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடையே அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளது.
டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்தியா முன்னேற வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது.
அவரது வாழ்க்கையும், பணியும் வரும் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி." எனக் குறிப்பிட்டுள்ளார், மேலும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் மறைவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் .
சமூக ஊடக எக்ஸ் பதிவில், துணை ஜனாதிபதி கூறியுள்ளதாவது;
"இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்திய விவசாயத்திற்கு அவரது மகத்தான பங்களிப்பு நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது, அதே நேரத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளின் செழிப்புக்கு பங்களித்தது. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக் கூறியுள்ளார்வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது,
கருத்துகள்