சென்னை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகப் பணியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை -
சென்னை தியாகராய நகர் பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதிமணி வீட்டில் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்கள் முன் சோதனை நடத்தினர்.
தமிழ் நாட்டில் ரியல் எஸ்டேட் நில வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டுள்ள 30 நபரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் நேற்றுக் காலையில் துவங்கி அதிரடியாச் சோதனை நடத்தினர். பின்னர்
அமலாக்கத் துறையின் விசாரணையில் ஜோதிமணி கமலாலயத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. மேலும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவரான காளிதாஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகச் செயலாளர் ஆகியோரை ஜோதிமணியின் வீட்டுக்கே வரவழைத்து அமலாக்கத் துறையின் அதிகாரிகள் விசாரித்தனர்.
ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சண்முகம் என்பவருக்கும், ஜோதிமணிக்கும் ஏதாவது தொடர்புள்ளதா, இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்
முன்னதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜோதிமணி வீட்டுக்கு வந்த போது, அவரில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது சோதனையைத் தொடங்கினா். ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்தச் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ஜோதிமணி விடுத்த செய்திக்குறிப்பில்தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்குச் சென்றதும்,சென்ற வேகத்திலேயே திரும்பி வந்ததும் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இந்த ரெய்டின் காரணம் என்ன? மணல் வியாபாரிகளிடமிருந்து மாதம் 50 லட்சம் ரூபாய் அவர் பெயரில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதுதொடர்பாக விசாரிக்கத்தான் அமலாக்கத்துறை அவர் வீட்டுக்குச் சென்றதா? அந்தப் பணத்தைப் பெற்றதில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்புள்ளதா? இல்லையென்றால் ஏன் அமலாக்கத்துறை போன வேகத்திலேயே திரும்பி வரவேண்டும்? அமலாக்கதுறையை பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்? என்று வினா எழுப்பியுள்ளார்
கருத்துகள்