மும்பையின் புகழ்பெற்ற கணபதி பந்தலில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வழிபட்டார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள உலகப் புகழ்பெற்ற லால் பாக்கா ராஜாவில் விநாயகர் உற்சவ நிகழ்வில் வழிபாடு செய்தார். இதுதவிர மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கணபதி பந்தலில் அமித் ஷா வழிபாடு நடத்தினார்.
அப்போது மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் மகாராஷ்டிரா முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் திரு தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று கணபதி பப்பாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபட்டார்.
கருத்துகள்