செய்தியாளர்:- ஆர்.சர்தபவார் இலஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் இராமேஸ்வரத்தில் கைது.
இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனையும் நடத்தினர் ரூபாய் .5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது:
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் தங்கச்சிமடம் சத்யா நகர் டோர்ஜோ லியோன் எனபவர் பேய்கரும்பில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவகத்தின் அருகில் ரிசார்ட் வைத்துள்ளார். டோர்ஜோ லியோன் ரிசார்ட்க்கு உயர் மின்ழுத்த மின்கம்பிகள் மாற்றுவது அதாவது மும்முனை இணைப்புக் குறித்து இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் சென்ற வாரம் விண்ணப்பித்த நிலையில் உயர் மின் அழுத்தக் கம்பிகள் மாற்றி கொடுப்பதற்கு தடையில்லாச் சான்றிதழ் வாங்குவதற்காக இராமேஸ்வரம் உதவி மின் பொறியாளர் ரூபாய் 5 ஆயிரம் இலஞ்சம் கேட்டதாகவும் அதையடுத்து கொடுக்க விரும்பாத டோர்ஜோ லியோன் இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து அவர்கள் ஆலோசணையின்படி நேற்று மாலை இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளர் அருள் சகாய டார்ஜனிடம் டோர்ஜோ லியோன் ரூ.5 ஆயிரம் பினாப்தலின் வேதிப்பொருள் தடவிய ரூபாய் நோட்டுக்களை இலஞ்சமாகக் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த துணைக் கண்காணிப்பாளர் இராமசந்திரன் தலைமையில் ஆய்வாளர் இராஜேஸ்வரி ஆகியோர் அடங்கிய ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வணிக ஆய்வாளர் அருள் சகாய டார்ஜனை இரசாயணம் தடவிய இலஞ்சம் பெற்ற ரூபாய் நோட்டுக்கள் பெற்ற கையுடன் பிடித்து அவரிடமிருந்த ரூபாய்.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து சோடியம் கார்பனைட் கரைசலில் சோதித்து உறுதி செய்து அரசு சாட்சிகள் முன் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறை சேர்த்தனர்.
கருத்துகள்