போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்திற்கு ராயல் தாய்லாந்து கடற்படையின் தூதுக்குழு வருகை
ராயல் தாய்லாந்து கடற்படையின் மூன்று பேர் கொண்ட தூதுக்குழு 04 - 05 செப்டம்பர் 23 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தைப் பார்வையிட்டது. இந்தப் பயணம், 12வது இந்தியக் கடற்படை-ராயல் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் போது இருதரப்பும் முடிவு செய்தபடி, கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத் தலைமை இயக்குநர் உத்தையாவுடன் ராயல் தாய்லாந்து கடற்படையின் கேப்டன் ஜக்கரின் கலந்துரையாடினார்.
போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் பற்றிய கண்ணோட்டம் தூதுக்குழுவினருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டு கடற்படை கப்பல் கட்டுமானத்தின் பரிணாம வளர்ச்சி காண்பிக்கப்பட்டது. அவர்களுக்குப் பல்வேறு வசதிகள், வடிவமைப்புக் கருவிகள், பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், உள்நாட்டு உபகரணங்கள் உற்பத்திச்சூழல் அமைப்பு ஆகியவையும் காண்பிக்கப்பட்டன. கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தில் உள்ள துறை வல்லுநர்களுடன் தூதுக்குழு விவாதித்தது. கப்பல் கட்டும் தளத்தின் பல்வேறு கட்டுமான தொழில்நுட்பங்களைப் பார்வையிட கோவா கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும் தூதுக்குழு செல்லவுள்ளது.
கருத்துகள்