வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ் சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கு திரு M முரளி, IRS, வருமானவரி ஆணையர் (டி.டி.எஸ்), சென்னை மற்றும் திரு M அர்ஜுன் மாணிக், IRS, வருமானவரி இணை ஆணையர், டி டி எஸ் சரகம்-3, சென்னை இவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (20-09-2023) சிங்காரவேலர் மாளிகை, சென்னையில் வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கத்தை நடத்தினர்.
திரு ராஜன், உதவி சம்பள கணக்கு அலுவலர் (வடக்கு) தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.
வருமானவரி அலுவலர் திரு L ராஜாராமன், வருமானவரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு TDS / TCS விதிகளின் சாராம்சத்தை விளக்கினார். மேலும் அவர், வருமானவரிப் பிடித்தம் செய்யவேண்டியதன் முக்கியத்துவம், வருமானவரிப் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம், TDS/TCS காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய தேவை, TDS/TCS சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியம் இவைகள் குறித்து எளிமையாக விளக்கினார்.
அவர், குறிப்பாக, சம்பளம் மற்றும் ஒப்பந்த செலவில் வருமானவரிப் பிடித்தம் செய்வதன் அவசியம் குறித்தும், உடைசல்களை விற்கும்பொழுது வருமானவரி வசூல் செய்ய வேண்டிய தேவை குறித்தும் தெளிவாக விளக்கினார்.
மேலும், ஒவ்வொரு வரிப்பிடித்தம் செய்பவரும், நிதி ஆண்டின் ஆரம்பித்திலேயே, தமது அலுவலகத்தில் பணிபுரியம் அனைத்து அரசு அலுவலர்கள் பெறக்கூடிய மொத்த சம்பளத்தை முன்கூட்டியே கணக்கிட்டு, அந்த நிதி ஆண்டிற்கு, வருமானவரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரி விகிதத்தங்களின் அடிப்படையில் அவரவர் செலுத்த வேண்டிய வருமானவரியை கணக்கிட்டு, அதனை சராசரி அடிப்படையில், முதல் மாத சம்பளத்திலிருந்தே வரிப் பிடித்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வருமானவரி அலுவலர் திரு K செந்தில் குமார், வருமானவரிப் பிடித்தம் / வருமான வரி வசூல் விதிகளை முறையாக பின்பற்றவில்லையெனின் ஏற்படும் விளைவுகளான வட்டி, தாமத கட்டணம், அபராதம் மற்றும் வழக்கு இவைகளை தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்த கருத்தரங்கத்தில், தலைமை ஆணையரகம் (TDS), சென்னை அவர்களின் அரும்பணியால், வருமானவரிப் பிடித்தம் செய்பவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கீழ்கண்ட வசதிகளை, அவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டுதல் விடுக்கப்பட்டது.
1. இந்தியாவில், முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட CHATBOT என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், TDS நண்பன் என்ற பெயர்கொண்ட ஒரு APPLICATION , PLAYSTORE ல், ஆண்ட்ராயிட் மற்றும் ioS உபயோகிப்பாளர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை http://www.tnincometax.gov.in/ என்ற இணையதள முகவரியின் கீழ் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
2. e - TDS காணொளிகள், தமிழில் உருவாக்கப்பட்டு, அவை, முதன்மை தலைமை ஆணையரகத்தின் அதிகாரபூர்வ YOUTOUBE CHANNEL ல் https://youtube.com/@incometaxtamilnaduandpuduc9090 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. TDS MANUAL தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடக்கிப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், whatsapp வழியாக பகிரப்பட்டது.
4. மற்றும் TDS PAMPHLETS தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடக்கிப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், whatsapp வழியாக பகிரப்பட்டது.
திருமதி ஜானகி, வருமானவரி பிடித்தம் ஆலோசகர், வருமானவரிப் பிடித்தம் காலாண்டு படிவங்கள் எவ்வாறு TRACES தளத்தில் தாக்கல் செய்வது என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் அவர், TRACES தளத்தில் எழுந்துள்ள பல்வேறு விதமான கேட்பு தொகைகளை குறைப்பது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.
கருத்துகள்