பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவும் 61 வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடந்தது.
தேசியமும்,தெய்வீகமும் இரு கண்களெனக் கூறிய ஒரு புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவும் 61 வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடந்தது. பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி மரியாதை மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் திருமகன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் தேவரின் நினைவிடத்துக்கு ஆண்டு தோறும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள் அதில் அரசியல் விழாவாகவும் ஆன்மீக விழாவாகவும் நடக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நேற்றும் இன்றும் உ.முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தட...