புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து கல்விச்சாலைகளை பசுமை பள்ளிக் கூடங்களாக அறிவித்து தலா ரூபாய் 20 இலட்சம் சிறப்பு நிதி வழங்கப்படுவதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யாநாதன் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கம் புதுக்கோட்டை மாவட்ட. ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யாவின் தலைமையில் நடைபெற்றதில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் வெப்பநிலை உயர்வு குறித்து மாணவர்களிடமே இன்று விழிப்புணர்வைத் தொடங்கியுள்ளோம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து கல்விச் சாலைகளை பசுமை பள்ளிக் கூடங்களாக அறிவித்துள்ள நிலையில் கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை அரசினர் முன்மாதிரிப் பள்ளி திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வெண்ணாவல் குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி கீரமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளிபள்ளிகளாகிய ஐந்து பள்ளிக் கூடங்களுக்குத் தலா ரூபாய் 20 இலட்சம் விதம் மொத்தமாக ரூபாய் ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் திருக்கட்டளையில் குப்பைக் கிடங்கில் நீண்ட காலமாக குப்பைகள் தேங்கியுள்ளதால் அந்தக் குப்பையிலிருந்து மீத்தேன் போன்ற கொடிய விஷவாயு வெளியாகி பிளாஸ்டிக் கழிவுகள் தானே எரிவதால் டையாக்ஸின் போன்ற கொடிய வேதிப்பொருள் உறுவாகிறது இந்தக் குப்பைக் கிடங்குகளை அறவே அழித்தொழிக்கும் வகையில் அது பிரித்தெடுக்கப்பட்டு பயோமைனிங் முறையில் சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்குக் கொண்டு வரப்படும் நிலையுள்ளது நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் இதற்காக தமிழ்நாடு முழுவதும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என
சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்,
பல லட்சம் மரங்களை வளர்த்து தமிழநாட்டில் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் காத்து மரம் வளர்க்கும் ஆர்வலர் மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.
கருத்துகள்