தமிழ்நாடரசால் பா ஜ கவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வறிக்கையளிக்க நான்கு நபர்கள் கொண்ட குழு
தமிழ்நாடு அரசால் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையளிக்க நான்கு நபர்கள் கொண்ட குழு
அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறது.
நான்குநபர்கள் கொண்ட குழுவை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நேற்றிரவு அமைத்து உத்தரவிட்டார். இக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் ஆய்வு நடத்தி விரைவில் வழங்கும். இந்த நான்கு நபர்கள் கொண்ட குழுவில், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய இரயில்வே அமைச்சரும், தற்போதய மக்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி.சதானந்த கௌடா, மும்பை முன்னாள் காவல்துறை ஆனையரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டி.புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.பி.நட்டாவின் இந்த அறிவிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட பலர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டாண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுக், கைது செய்யப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுகவின் அரசு ஈடுபடுகிறது. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களைக் குறிவைத்துக் கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் இந்தக் குழு கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவால் நியமிக்கப்பட்ட நான்கு நபர்கள் குழு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழ்நாடு வருகிறது. இந்த குழுவினர், தமிழகத்தில் பாஜகவினர் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர் அதன் அடிப்படையில் மத்திய அரசு சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை பாஜ எடுக்கலாம் என்ற நிலை உள்ளது.
கருத்துகள்