இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனை அறிக்கை குறித்த கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு
தேசிய ஒலிபரப்புக் கொள்கையை" உருவாக்குவதற்கான உள்ளீடுகள் குறித்த இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனை அறிக்கை குறித்த கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023 செப்டம்பர் 21 அன்று "தேசிய ஒலிபரப்பு கொள்கையை" உருவாக்குவதற்கான உள்ளீடுகள் குறித்த முன் ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது.
ஆலோசனைக்கு முந்தைய அறிக்கையில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 2023, அக்டோபர் 10 என்று நிர்ணயிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட முன் ஆலோசனைப் அறிக்கையில் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2023 அக்டோபர் 31 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
advbcs-2@trai.gov.in, jtadvbcs-1@trai.gov.in என்ற மின்னஞ்சலில் கருத்துகளை அனுப்பலாம் ஏதேனும் விளக்கம் / தகவல்களை அறிய, ஆலோசகர் (பி & சிஎஸ்) திரு அனில் குமார் பரத்வாஜை +91-11-23237922 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
கருத்துகள்