54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக திரைப்படம் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது வென்றது; அரசியல் மற்றும் உணர்ச்சி எல்லைகளைக் கடந்து பாரபட்சங்களை எதிர்கொள்ளும் அன்பின் சக்தியை படம் சித்தரிக்கிறது பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை 'பிளாகாஸ் லெசன்ஸ்' படத்திற்காக பெற்றார் . 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' படத்தில் நுணுக்கமான, சிறந்த நடிப்புக்காக பவுரியா ரஹிமி சாமுக்கு சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. 'பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ்' படத்தில் பரந்த அளவிலான உணர்ச்சிகளை தடையின்றி வெளிப்படுத்தியதற்காக மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. 'காந்தாரா' படத்துக்காக இந்திய திரைப்பட இயக்குநர் ரிஷாப் ஷெட்டிக்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்துள்ளது. இந்தப் படம் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான கருத்தியல் மோதலை ஆராய்கிறது சிறந்த அறிமுக படத்திற்கான விருது இயக்குநர் ரெகர் ஆசாத் கயாவுக்கு 'வென் தி சீட்லிங்க்ஸ் குரோ...
RNI:TNTAM/2013/50347