கோவாவில் இந்திய சர்வதேச திரைப்படவிழா 'ஃபேமிலி ஆல்பம்' திரைப்படத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட அனுபவங்கள் உத்வேகம் அளித்தன -
பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள படம் உதவும்: உருகுவே திரைப்பட இயக்குனர் கில்லெர்மோ ரோகாமோரா
கோவாவில் நடைபெற்று வரும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களுடனான கலந்துரையாடல் இன்று (25-11-2023) நடைபெற்றது. இதில் உலக சினிமா (சினிமா ஆஃப் தி வேர்ல்ட்) பிரிவின் கீழ் திரையிடப்பட்ட 'ஃபேமிலி ஆல்பம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கில்லெர்மோ ரோகாமோரா தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தமது தனிப்பட்ட அனுபவங்கள் படத்தை வடிவமைப்பதில் எவ்வாறு உத்வேகம் அளித்தன என்பது குறித்து உருகுவே இயக்குனர் கூறுகையில், இது தமது குடும்ப அனுபவத்தைப் பற்றியது என்றும் தமது பெற்றோர் விவாகரத்து பெற்றபோது தமக்கு 16 வயது என்றும் கூறினார்.
ஸ்பானிஷ் மொழிப்படமான இப்படம், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மற்றும் தந்தை மகன் உறவை மையமாகக் கொண்டதாகும் என அவர் தெரிவித்தார். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் இந்த படம் பயனளிக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
வாழ்க்கையில் இசையின் தாக்கம் குறித்தும், படத்தில் அது ஒரு முக்கிய அம்சமாக இருப்பது குறித்தும் இயக்குநர் எடுத்துரைத்தார்.
இந்தப் படம் குடும்பச் சிக்கல்களை ஆராய்வதுடன் அன்பு, நீடித்த பிணைப்பு ஆகிய கருப்பொருள்களுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இயக்குனர் பற்றி:
கில்லெர்மோ ரோகாமோரா ஒரு திரைப்பட மற்றும் விளம்பர தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவரது குறும்படமான பியூன் வியாஜே (2008) கேன்ஸ் எஃப்.எஃப் இல் போட்டியிட்டது. அவரது முதல் படமான சோலோ (2013) மியாமியில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட விருதை வென்றது. டிஸ்கவரி சேனலுக்காக லா எசென்சியா டி கரோலினா ஹெரேரா டி பேஜ் (2013) என்ற ஆவணப்படத்தை இவர் எழுதி இயக்கியுள்ளார்.இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் 'சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது' போட்டியில் ஏழு படங்கள் போட்டியிடுகின்றன
கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநர் பிரிவில் 7 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு திரையிடப்படுகின்றன. இந்தப் பிரிவு வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அவர்களின் சிறந்த திரைப்படங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.
இந்த ஆண்டு இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்:
அல்மோஸ்ட் என்டைர்லி எ ஸ்லைட் டிசாஸ்டர்: உமுத் சுபாஸால் இயக்கப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் இஸ்தான்புல்லில் உள்ள நான்கு நபர்களின் வாழ்க்கையை ஆராய்கிறது. புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளும் கவலைகளுடன் நகைச்சுவையை சாமர்த்தியமாக இந்தப் படம் இணைத்துள்ளது.
லெட் மீ கோ: மாக்சிம் ராப்பாஸ் இயக்கிய இந்தப் படம் சுவிட்சர்லாந்தில் கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழா, ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் இடம்பெற்றது.
ஒகாரினா: அல்பான் ஜோக்ஜானி இயக்கிய அல்பேனியத் திரைப்படமான ஒகாரினா, ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும்போது வாழ்க்கை முறை மாற்றத்தால் எழும் குடும்பப் பிரச்சினைகளின் கதையாகும்.
ஸ்லீப்: ஜேசன் யூவின் என்ற இயக்குநரால் இயக்கப்பட்ட இந்தத் தென் கொரிய திரைப்படம் ஒரு கர்ப்பிணி மனைவியின் கதையைச் சொல்கிறது.
வென் தி சீட்லிங்ஸ் குரோ: துருக்கிய திரைப்பட இயக்குநர் ரீகர் ஆசாத் கயா இயக்கிய இந்த திரைப்படம் கோபானேவில் உள்ள ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி சுழல்கிறது, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் மீது போரின் விளைவுகளையும் இது இணைக்கிறது.
தாய் ஆகர்: அம்ரிக் சிங் தீப்பின் 'தீர்த்தன் கே பாத்' நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரவீன் அரோரா இயக்கிய இந்தி திரைப்படமான இது 1980-களில் உத்தராகண்ட் மாநிலத்தில் நடக்கும் கதை ஆகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அழுத்தமான செய்தியுடன் காதலை ஒரு விடுதலை சக்தியாக இந்தப் படம் வலியுறுத்துகிறது.
இரட்டா: ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கிய இந்திய மொழியான மலையாளத் திரைப்படமான இரட்டா, காவல் துறையில் பணிபுரியும் இரட்டையர்கள், அதில் ஒருவரின் மரணம் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை விவரிக்கிறது.'குல்மோஹர்' திரைப்படம் மூன்று தலைமுறைகளாக குடும்பம் மற்றும் வீட்டின் அர்த்தங்களை ஆராய்கிறது: இயக்குநர் ராகுல் வி. சித்தெல்லா
கோவாவில் நடைபெற்று வரும் 54-வதுசர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பிரிவில் ராகுல் வி.சித்தெல்லா எழுதி இயக்கிய குல்மோஹர் என்ற இந்திப் படம் திரையிடப்பட்டது. இந்த படம் குடும்பம் மற்றும் வீடு என்பதன் அர்த்தங்களை ஆராய்கிறது, பத்ரா சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களின் தனிப்பட்ட கதைக்களங்களை இது ஒன்றிணைக்கிறது.
பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் உரையாடிய, குல்மோஹர் திரைப்படத்தின் முன்னணி நடிகரான மனோஜ் பாஜ்பாய், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரால் உருவாக்கப்பட்ட குடும்ப சூழல் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். படப்பிடிப்பின்போது நிலவிய "குடும்பமும் அதன் உணர்வும் அதைத் தாண்டி நீண்டதாக அவர் தெரிவித்தார். இத்திரைப்படம் குடும்பம், அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட உறவுகளை சித்தரிக்கிறது என்று அவர் கூறினார்.
குல்மோஹர் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட படத்தின் இயக்குனர் ராகுல் வி சித்தெல்லா, குடும்பம் மற்றும் வீட்டின் அர்த்தங்கள் மற்றும் வரையறை காலப்போக்கில் மாறுகிறது என்றார். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எப்போதும் முக்கியம் என்று அவர் கூறினார். மூன்று தலைமுறையாக குடும்பம், வீடு என்ற அர்த்தத்தை இப்படம் பேசுகிறது என அவர் கூறினார். குல்மோஹர் என்ற தலைப்பு ஒரு கவித்துவமானது என்றார். குல்மோஹர் மிக விரைவாக பூத்து விழும் ஒரு மலர் என்றும் அதன் தன்மை தாம் சொல்ல முயற்சிக்கும் கதைக்கு பொருந்துவதாகவும் மனோஜ் பாஜ்பாய் கூறினார்.
மனோஜ் பாஜ்பாய், ஷர்மிளா தாகூர், சிம்ரன், அமோல் பாலேகர் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்தி படத்தில் அறிமுகமாவது ஒரு கனவு போன்றது என்று குல்மோஹர் படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான சாந்தி பாலச்சந்திரன் கூறினார். மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டிய சாந்தி பாலச்சந்திரன், மலையாளத் திரைப்படத் துறையைப் போலல்லாமல், இந்தி சினிமா ஒரு பெரு நிறுவனக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது என்று கூறினார்.
மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடித்த “சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை” படத்தின் இயக்குனர் அபூர்வ் சிங் கார்கியும் உரையாடலில் பங்கேற்றார்.
கருத்துகள்