பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார். அவரது வயது 70.
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா என்ற ரகு சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என மாற்றிக் கொண்டார். 1975 ஆம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
நடிகர் அஜித்குமாருடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கியகஹ கதாபாத்திரத்தில் நடித்தவர், இறுதியாக 2021 ஆம் ஆண்டில் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ எனும் படத்தில் நடித்தார். பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தவிர்த்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட தொலைக்காட்சித்தொடர்களிலும் நடித்துள்ளார்.
இன்று அதிகாலை சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் மூச்சுத் திணறல் காரணமாகக் காலமானார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுமென்று கூறப்படுகிறது. ஜூனியர் பாலையாவின் மறைவுக்கு திரையுலகு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது தந்தை டி. எஸ். பாலையா கடந்த காலத் தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். பழைய திருநெல்வேலி மாவட்டம் பூர்வீகம் சொந்த ஊர் சுண்டன்கோட்டை ,தற்போது தூத்துக்குடி மாவட்டம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாகுமஹ தந்தையார் சுப்பிரமணிய பிள்ளை அனுமதியில் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் காரணமாக. பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோயமுத்தூரைச்ச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பதிபக்தி’ நாடகக்கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. நாடகத்தில் எந்த மாதிரியான வேடத்தில் பாலையா நடித்தாரோ, அதே மாதிரியான வேடத்தில் அவரை 1936 ல் வெளியான ‘‘சதிலீலாவதி’’யில் நடிக்க வைத்தார்
மருதாசலம் செட்டியார். எல்லிஸ் ஆர். டங்கன் இப்படத்தை இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். அவரது மூன்றாவது மகன் நடிகர் ஜூனியர் பாலையா என்ற ரகு பாலையா சென்னையில் 28.06.1953 ல் பிறந்தவர் தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி சுவிசேஷத்திற்கு மாறினார் .
கருத்துகள்