பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் ஆலோசனை
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (நவம்பர் 13, 2023) இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு கிராண்ட் ஷாப்ஸுடன் தொலைபேசியில் உரையாடினார். இரு அமைச்சர்களும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். தற்போது நடைபெற்று வரும் கூட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்ததுடன் புதிய பிரிவுகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். திரு கிராண்ட் ஷாப்ஸ், இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குக்கு அழைப்பு விடுத்தார். இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட திரு கிராண்ட் ஷாப்ஸுக்கு இந்த உரையாடலின்போது திரு ராஜ்நாத் சிங் வாழ்த்துத் தெரிவித்தார்.
கருத்துகள்