தமிழ் நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை. அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமாக பல கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்களிப் இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வரி ஏய்ப்புத் தொடர்பாக வந்த புகார்களை அடுத்து சோதனை நடத்துவதாகத் தகவல்.
திருவண்ணாமலையிலுள்ள அவர் வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகளிலும், மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடக்கிறது. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறையினரின் சோதனை நடந்து வருவதாகவும் தகவல் , தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணித்துறை என்பது அதிகம் பணம் வருவா் புழங்கும் துறை. எ.வ. வேலு திமுகவிற்காக அதிகம் செலவு செய்யும் அமைச்சர்களில் ஒருவர். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். திமுக எதிர்கட்சியாக இருந்த போதும் நிறைய செலவு செய்பவர். பசையான துறையை கையில் வைத்துள்ள பசையான அமைச்சர் எ.வ. வேலு.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவில் அதிகம் பணம் வைத்துள்ளவர்களை குறி வைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவிற்கு சொந்தமான 100 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்