சென்னையில் அரசு மாநகரப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இழுத்துத் தாக்கியதாகக் கைதான நடிகையும் பாஜகவின் நிர்வாகியுமான இரஞ்சனா நாச்சியாருக்கு நேற்றிரவே நிபந்தனை ஜாமீன்
வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை குன்றத்தூரிலிருந்து போரூர் வரை சென்ற அரசு மாநகரப் பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்த போது அந்த வழியாகக் காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான இரஞ்சனா நாச்சியார் அரசு மாநகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் "படிக்கட்டில் மாணவர்கள் இப்படித் தொங்கியபடி வருகிறார்கள். நீங்கள் கேட்க மாட்டீங்களா' என்றார். மேலும் "அங்க பாருங்க ஒருத்தன் மேலே ஏறுகிறான் என்றவர். உடன் பேருந்தின் பின்பக்கம் சென்று தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்தத் தள்ளினார். வர மறுத்த மாணவர்களை கையால் அடித்தார், அதிலும் பேருந்து மீது ஏறிய ஒரு பள்ளி மாணவனையும் அடித்தார். மேலும் பள்ளி பேட்ச்சையும் காட்டி அடித்தார். மாணவர்களை நாயே ஏன்டா அறிவில்ல என அழைத்து கடுமையாகத் கத்தினார். அந்தப் படிக்கட்டில் யாரெல்லாம் நிற்கிறார்களோ அவர்களை எல்லாம் இறக்கிவிட்டார்.மேலும் நடத்துனரிடம் ஏன் நீங்கள் இதை யெல்லாம் கேட்க மாட்டீர்களா? என்ற நடிகை ரஞ்சனாவின் செயலுக்கு சில மக்களின் ஆதரவும் சிலரது எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை அவருக்கு யார் கொடுத்தது என்ற ரீதியில் சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைதத நிலையில் நடிகை ரஞ்சனா மீது மாணவர்களைத் தாக்கியதாக ஒரு வழக்கும், ஓட்டுனர் , நட்துனரை அவதூறாகப் பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து
நேற்று காலை கெரும்கம்பாக்கத்திலுள்ள நடிகை இரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். அப்போது கைது செய்ய வாரண்ட் எங்கே என கேட்ட இரஞ்சனா நாச்சியாரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவாகிவிட்டதால் வாரண்ட் தேவையில்லை எனக் கூறியபடி காவல்துறையினர் கைது செய்து ஸ்ரீபெரும்பதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அன்று மாலையே அதையடுத்து, நடிகை ரஞ்சனாவுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீனும் வழங்கியது ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றம். மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. நடிகை இரஞ்சனா நாச்சியார் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் சமுதாய அக்கறையோடு செய்யப்பட்டவையாக தான் கருதப்பட வேண்டும்.
என பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கருத்து மேலும் அவரின் கடின வார்த்தைகள் தவறு தான், ஆனால் அந்த வார்த்தைகள் அந்த நேரத்திற்கான தவிர்க்க முடியாத தேவை தான் என கருதுகிறேன். மாணவர்களை கை நீட்டி அடித்தது சட்டப்படி குற்றம் தான், ஆனால், அது தார்மீக கோபத்தினால்,மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் நிகழ்ந்தது என்பதை சிறு குழந்தை கூட சொல்லும். நடத்துனரை ஒருமையில் பேசியது சட்ட விரோதமாக இருந்தாலும், அரசு ஊழியர்களின் அலட்சியத்தை தட்டி கேட்காத அதிகாரிகளின் பொறுப்பின்மையினால் எழுந்த கோபம் என்றே எடுத்து கொள்ளபட வேண்டும். அவர் விளம்பரத்திற்காக அதை செய்திருந்தாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அதை வரவேற்பதில் தவறில்லை. அரசின் அலட்சியத்தை, அதிகாரிகளின் மெத்தனத்தை வெளிக்கொண்டு வந்ததால் அது குற்றமில்லை என கருதப்படலாம். ஆனால், அதையெல்லாம் மீறி, வழக்குத் தொடர்ந்து கைது செய்தே தீர வேண்டும் என்று அரசு நினைத்தால் சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும்.
ஆனால்,சமூக அவலத்தை கண்டித்த இரஞ்சனா நாச்சியாரைக் கைது செய்த தமிழகக் காவல்துறை, பொது மக்கள் முன்னிலையில் நமது பிரதமரை தரக்குறைவாக பேசிய, ஒருமையில் விமர்சித்த தி மு கவின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனைக் கைது செய்யாதது ஏன்? சட்டமன்ற உறுப்பினர் சட்டத்தை மீறலாமா? தரக்குறைவாகப் பேசலாமா? அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்காதா? சிறைக்கதவுகள் அவருக்கு திறக்காதா? அரசு இயங்காதா? யார் தவறு செய்தாலும் தண்டிப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அந்த அரசை பொறுப்பேற்று நடத்தும் முதல்வருக்கு பெருமை. சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கைது செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்
நாராயணன் திருப்பதி. இருந்தாலும் ரஞ்சனா நாச்சியாள், ரொம்பவே ஓவர் அக்டிங் நடிப்பை கொடுத்திட்டாரோ!
முதல்ல நான் கூட, அட, இவ்வளவு துணிச்சலான பொறுப்புள்ள பெண்ணாக இருக்காங்களேனு நினைத்தாலும் !
அப்புறம் சின்னப் பையனை அடிச்சு இழுத்து கீழே இறக்கிய போது பதட்டமானது !
நட்துனரை ஒருமையில் திட்டிய போது அது இராமநாதபுரம் மண் தந்த வீரம் இது சென்னைக்கு இது ஓவரா தெரியுதேன்னு நெனைச்சேன்!
மாணவர்கள் தொங்கி வருவது தப்பு என்றாலும், பள்ளி, கல்லூரி நேரங்களுக்குத் தகுந்தாற் போல அந்தந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்காத அரசின் தவறும் இதில் அடங்கியுள்ளது. பேருந்துக்குள்ளே இடமில்லாத நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதும் இருக்கு!
பங்கு ஆட்டோவில் பத்துநபர்கள் வரை ஏற்றினால் மாமூலாகத் தண்டிக்காத சென்னை காவல்துறை தான் காரில் செல்லும் ஒருநபர் அதிகம் என அபராதம் விதிக்கிறது இதில் பொதுநீதி யாதெனில் இது ஊழல் தடுப்பு வாரம் ஆனால் பல ஊழல்களை தடுப்பது தான் யாரோ? என்ற வினா எழ சமூகத்தில் ரஞ்சானா நாச்சியார் மாதிரி பொறுப்பான நபர்கள் தான் தேவை ..
கருத்துகள்