முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக-வின் மூன்று மாநிலத் தேர்தல் வெற்றி 2024 ஆம் ஆண்டின் வெற்றியின் கட்டியம் கூறல்

பாஜக-வின் மூன்று மாநிலத் தேர்தல் வெற்றி 2024 ஆம் ஆண்டின் வெற்றியை  கட்டியம் கூறுகிறது' -

நடைபெற்று முடிந்த நான்கு  சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.  ஆட்சியிலிருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்தது. இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறதென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை  அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது  “இன்றைய ஹாட் டிரிக் வெற்றி, 2024 ஆம் ஆண்டுக்கான ஹாட்டிரிக் வெற்றியை உறுதி செய்துள்ளது.” எனத் தெரிவித்தார்.



பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களிடம் 40 நிமிடங்கள் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோஷம் தான் வெற்றி அடைந்தது. நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் வெற்றியடைந்தன” என்றார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மக்கள் தம் மீது அன்பை பொழிந்தனர் , பாஜக வெற்று வாக்குறுதிகளை வழங்காது, மக்களுக்கான ஆட்சியை வழங்கும். இந்திய வாக்காளர்களுக்கு யார் சுயநலவாதிகள், யார் தேசத்தின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் எனத் தெரியும்.” என்றார்.

இந்த வெற்றியானது பெண்கள், பழங்குடிமக்கள், விவசாயிகள், மற்றும் இளைஞர்களுக்கான வெற்றி எனத்  தெரிவித்தார்.

“ நான் வெற்றி பெற்றுளேன்’ என ஏழைகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இன்று வெற்றி அமைந்துள்ளது. அவர்கள் ஒவ்வொருக்குமான தனிப்பட்ட வெற்றியாகும். ஒவ்வொரு ஏழையும், ஒவ்வொரு பழங்குடியினச் சகோதர சகோதரிகளும், ஒவ்வொரு விவசாயியும் இன்று வெற்றி பெற்றுள்ளார்கள். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாகபப் பார்க்க விரும்பும் ஒவ்வொரு இந்தியரும் இன்று வெற்றி பெற்றுள்ளார்” என்றார் .



ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்ததை மறைமுகமாகச் சாடினார் பிரதமர் . “இந்த தேர்தலில் ஜாதியால் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. எனக்கு நான்கு சாதிகள் தான் எப்போதும் முக்கியம் – பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள். இந்த நான்கு பேரை மேம்படுத்துவதன் மூலமே, நாடு முன்னேற்ற முடியும்” என்றார்.

மேலும் பாஜகவின் பலத்துக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிவித்தார். “பெண்கள் சக்தி தான்  பாஜகவின் முக்கியத் தூண். இந்த தேர்தல்களில், இந்த நாட்டின் பெண்கள் நம்மை வாழ்த்தியுள்ளனர்.” என்றார்.

“ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். ஏனென்றால் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பாஜக அவர்களின் நலன்களுக்காக பாடுபடுகிறது எனத் தெரியும்.” மேலும்  தெலுங்கானா மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.




“தெலங்கானா மக்கள் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். தெலங்கானாவில் பாஜக வளர்ந்து கொண்டேயிருக்கிறது” என்றவர் “இந்தத் தேர்தல்களின் அதிர்வுகள் உலகெங்கிலும் உணரப்படும். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு, 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கையை  அளிக்கும்” என்றார்.

பாரதிய ஜனதா கட்சியல்லாத பிற கட்சிகளின் மாநில அரசுகளையும் எதிர்க்கட்சிகளையும் சாடிய பிரதமர் நரேந்திர மோடி, “ஊழல், பிரிவினைவாதம், குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை என்பதை இன்று வந்த முடிவுகள் உணர்த்துகின்றன.



மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களிலிருந்து மக்கள் பலன் பெறுவதை தடுக்கும் மாநில அரசுகளுக்கு இந்த முடிவுகள் ஒரு பாடமாகும்.” என்றார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் அதே உற்சாகத்துடன் செயல்பட வேண்டுமென்பதை உணர்த்தும் வகையில், “இன்று கிடைத்திருக்கும் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாஜக தொண்டரின் பொறுப்பும் இப்போது அதிகரித்துள்ளது.” என்றவர்,

தெலுங்கானா, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று மதியம்  அறிவிக்கப்பட்டன.

தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியது. மற்ற மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா .கட்சியின் வெற்றி உறுதியானதில், மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே இருந்த தனது ஆட்சியை பா.ஜ.க தக்கவைத்துக் கொண்டுள்ளது.



சத்தீஸ்கரிலும், இராஜஸ்தானிலும் காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறது

தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றிகளுக்குப் பின்னர், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் தீர்ப்புக்கு அடிபணிவதாகக் கூறினார்.

மேலும், மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி, மக்கள் நல்ல நிர்வாகத்துடன் உறுதியாக நிற்பதைக் குறிக்கிறது என்றார்.

அதே சமயம், தெலங்கானா தோல்வி குறித்துப் பதிவிட்டிருக்கும் அவர், அம்மாநிலத்தோடு பாரதி ஜனதா ஆபீசுக்கு இருக்கும் பந்தம் வலுவானதென்றும், அம்மாநில மக்களுக்காகத் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முன்னிலை நிலவரம் வருமாறு 

தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி

தெலுங்கானா தேர்தல் முடிவுகள் - தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்

தெலங்கானாவில் காங்கிரசின் வெற்றி உறுதியாகியது.

காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளிலும், பாரத் ராஷ்டிர சமிதி 39 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ரேவந்த் ரெட்டியின் பெயர் பெருமளவில் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது தொண்டர்களிடையே அவர் மிகப்பிரபலமாக இருந்தார். பிரசாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு இருந்த நிலையில் அடுத்த தெலங்கானா முதல்வராக அவரது பெயர் தலைமையால் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரேவந்த் ரெட்டி, தலைமைச் செயலகத்தின் கதவுகள் சாமானியர்களுக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என்றார்.

இனி மேல் , தெலுங்கானாவில் நிர்வாகம் கடந்த காலத்திலிருந்து மாறுபட்டதாகவே இருக்குமென்றார்.

மேலும், மக்கள் அளித்த தீர்ப்பை டி ஆர் எஸ் தலைவர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஏற்றுக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு ஒத்துழைக்குமென்று நம்புகிறோம் என ரேவந்த் ரெட்டி கூறினார்.

தெலங்கானா மாநிலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தங்களது வேட்பாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்ல, சொகுசுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன

தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்.வி.சுபாஷ், இது காங்கிரஸ் கட்சிக்குத் தனது வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி தற்போது ஆளும் கட்சியாகும். தெலுங்கானாவில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானா மாநில இராஷ்டீரிய சமிதி 88 தொகுதிகளை வென்றது, அப்போது, காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

தெலுங்கானாவில் போட்டிகள் மிகவும் கடுமையானது. தெலுங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்தது பி.ஆர்.எஸ். முன்பு டி.ஆர்.எஸ்.. தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியது அந்தக் கட்சி.

ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்-க்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.

பாரதிய ஜனதா கட்சி. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. இது தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்திலிருந்தன

இராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகள்: தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம் வருமாறு

இராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி 115 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும், பிற கட்சிகள் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன,

ஆட்சியமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது, பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதே.தெலுங்கனாவில் எதிரிகளுடன் உறவு வைத்துக் கொண்டே எதிர்த்து சமர்புரியும் வீராதி வீரனாகக் காட்டிக் கொண்ட கபட வேடதாரி கே சி ஆர் விவகாரத்தில் கடைசியாக மக்கள் சுதாரித்துக் கொண்டது தான் திருப்பு முனையானது!

தமிழகத்தில் அந்த நிலை தங்களுக்கு ஏற்படாமல் இனி சுதாரித்துக் கொள்ளும் இடத்தில் தான் ஆளும் கட்சியில் நிலைப்பாடு வேண்டும் என்ற கருத்து இத் தேர்தல் மூலம்  வந்துள்ளது, அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் அதற்கு முதலில் ஊழல் ஒழிப்பு அவசியம் , அது இனியாவது நடக்குமா என்ற வினா வருகிறது, 

முன்னாள் முதலமைச்சரும், ஜல்ரபதன் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான ராணி வசுந்தரா ராஜ சிந்தியா 3,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இராஜஸ்தானில் ஐந்தாண்டு கால  காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றது.

வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர்களின் சந்திப்பை நடத்திய வசுந்தரா ராஜே சிந்தியா, இது பிரதமர் நரேந்திர மோடியின் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனப் பேசியவர், இராஜஸ்தான் மக்கள் காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகத்தையும் நிராகரித்துள்ளனர் என்றார்.

இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய  இரு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியிலிருந்து வருகிறது. தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 199 இடங்களில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 73 இடங்களிலும் வெற்றி பெற்றது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்த பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கிய

மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தல் - தொகுதி வாரியாக வெற்றி நிலவரம் வறுமாறு 

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க 166 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி 72 சதவீதத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 29 சதவீதமுள்ள தொகுதிகளையும் பெற்றுள்ளன.

தற்போதய முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் புத்னி தொகுதி வேட்பாளருமான சிவ்ராஜ் சிங் சௌகான் ஒரு லட்சத்து 60 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகி. பெரும்பான்மையான இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றிருக்கிறது. கருத்துக் கணிப்புகளில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருதப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

முன்னிலை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, "பாரதிய ஜனதா கட்சி 125 முதல் 150 இடங்களில் வெற்றி பெறுமென்றார்.

மேலும், மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், இராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்களைப் பெறவேண்டிய நிலை.

முன்னிலை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மத்தியப் பிரதேசத்தில் கொண்டாட்டங்களை நடத்தித் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து  வருகின்றனர்.

முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தனது குடும்பத்தினருடனும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருடனும் சேர்ந்து தொண்டர்களைச் சந்தித்தார்.

பாரதிய ஜனதா கட்சி இந்தத் தேர்தலை, மகளிருக்கான தனது திட்டங்களை நம்பிச் சந்தித்தது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,250 ரூபாய் வழங்கும் ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியது. காங்கிரஸ் கட்சி அதைத் தேர்தல் விளம்பரமென விமர்சித்தது.

பிரதானக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இரு கட்சிகளுமே 230 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பி.எஸ்.பி) துலேஷ்வர் சிங் மார்க்கம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரக் கட்சியும் (ஜி.ஜி.பி) கூட்டணியாகப் போட்டியிட்டன. ஜிஜிபி கட்சியானது, கோண்ட் இன மக்களுக்கென தனியாக கோண்ட்வானா என்ற மாநிலத்தை அமைக்க வேண்டுமெனப் போராடும் கட்சி. இந்தக் கூட்டணியில் ஜிஜிபி 52 இடங்களிலும் பிஎஸ்பி 178 இடங்களிலும் போட்டியிட்டது.

சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடவே விரும்பி நடக்காத நிலையில் 80 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது. சந்திரசேகர ஆஸாத் தலைமையிலான ஆஸாத் சமாஜ் கட்சி 80 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 69 இடங்களிலும் போட்டியிட்டது. தவிர, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் சில இடங்களில் போட்டியிட்டது.

சத்தீஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி

சத்தீஸ்கர் மாநிலத்தில் .பாரதிய ஜனதா கட்சி 56 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளிலும் முன்னிலையிலுள்ளன.

தற்போது முதலமைச்சரான பூபேஷ் பாகெல், பின்னடைவைச் சந்திக்கிறார். அவர் தனது உறவினரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான விஜய் பாகெலை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான ரமன் சிங், ராஜ்னந்த்காவ் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

ரமன் சிங், தற்போதைய முதல்வர் பூபேஷ் பகல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அதனால் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்பியிருக்கின்றனர் என்றவர் காங்கிரஸ் ஆட்சியின் மீது ஊழல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

பெண்களுக்கான நலத்திட்டங்களும், முன்னேற்றத்திற்கான திட்டங்களும் தங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாகத் தெரிவித்தார்.     தெலுங்கனாவில் எதிரிகளுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டே எதிர்த்து சமர்புரியும் வீராதி வீரனாகக் காட்டிக் கொண்ட கபட வேடதாரி கே சி ஆர் விவகாரத்தில் கடைசியாக மக்கள் சுதாரித்துக் கொண்டது தான் திருப்பு முனையானது!

தமிழ்நாட்டில் அந்த நிலை தங்களுக்கு ஏற்படாமல் சுதாரித்துக் கொள்வதே ஆளும் கட்சிக்கு சிறந்த வழி அதற்கு உண்மையான ஊழல் ஒழிப்பைத் தான் தமிழ்நாட்டு  மக்கள் விரும்பும் நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...