கனிமவள புவியியல் சுரக்கத்துறை அலுவலர்கள் பணியிட மாறுதல்
பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் கூடுதல் பொறுப்பு வகித்த கரூர் மாவட்ட உதவி இயக்குநர் ஜெயபால், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு. திருச்சிராப்பள்ளி மாவட்ட இணை இயக்குநர் சரவணன், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்க உள்ளார், பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று நபர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சிராப்பள்ளி, கடலூர், சிவங்கை, அரியலூர் மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாடு முழுவதுமுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் 49 நபர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை யிட்டுள்ளது
அது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் உதவி புவியியலாளர்களாக உள்ள 23 நபர்கள் உதவி இயக்குநர்களாகப் பதவி உயர்வு பெற்று ஒரு மாதத்துக்கு மேலாகிறது. அதை அமல்படுத்த தற்போது அரசு ஆணை யிட்டுள்ளது. மற்றவர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
புவியியல் மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த 49 நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதில் 23 நபர்கள் பதவி உயர்வு பெற்றதாக கூறப்பட்டாலும் மற்ற 26 அலுவலர்கள் எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டனர் எனக் காரணம் தெரிவிக்கப்படவில்லை. அமலாக்கத் துறையின் தொடர் சோதனை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தான் அறசியல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்