சென்னையில் வீசிய மிக்ஜாம் சூறாவளியின் காரணமாக நேரிட்ட விளைவுகள் குறித்த பி எஸ் என் எல் தொலைபேசியின் அறிக்கை
மழை வெள்ளம் காரணமாக அதிகரித்த நீர்மட்டம் சென்னை தொலைபேசி நிறுவனத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியது. பள்ளிக்கரணை, தரமணி இணைப்புச் சாலை, மற்றும் தென் சென்னையின் வேளச்சேரி பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்தப் பகுதிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன
கனமழையால் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் நேரிட்ட பிரச்சினைகளுடன். நிலைமை மோசமடைந்ததால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அவசர உதவிக்கு அழைப்புகள் அதிக அளவில் வந்தன.
களத்தகவல்களின்படி வேளச்சேரி தொலைபேசி இணைப்பகம்
குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டது, மற்ற தொலைபேசி இணைப்பகங்கள் பிஎஸ்என்எல் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சியால் செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது.
பேட்டரி மற்றும் எஞ்சின் விநியோகம் ஆகியவற்றை பயன்படுத்தி, சேவைகளை சீராக்க குழு அயராது உழைத்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் நிலையங்களை விரைவாக மீட்டமைத்த மின்வாரியக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த முயற்சிகள் இருந்த போதிலும், சவால்கள் தொடர்கின்றன.
தரமணி இணைப்புச் சாலை இணைப்பகத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தீர்வு காரணமாக பணிகள் பாதிக்கப்படாமல் உள்ளது.
தரமணி லிங்க் ரோடு இணைப்பகத்தை மீட்டெடுப்பதில் அவசர உதவிக்காக டிரான்ஸ்மிஷன் குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் சென்னையின் முன்முயற்சியான நடவடிக்கைகள் மிக் ஜாம் சூறாவளி சவால்களுக்கு மத்தியில் பிரகாசிக்கின்றன
மிக் ஜாம் சூறாவளியின் தாக்குதலுக்குப் பிறகு, மழை நீர் சூழ்ந்ததால் நேரிட்ட சவாலை எதிர்கொண்டு பிஎஸ்என்எல் சென்னை, தொலைத் தொடர்பு சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்து கடுமையான சவால்களை முறியடித்து, மீட்சியின் கலங்கரை விளக்கமாக வெளிப்படுகிறது.
விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; பங்கெடுப்பாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், பிஎஸ்என்எல் சென்னை சூறாவளி தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான முன்முயற்சிகளின் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை அமைப்பு: மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது, இது தொடர்பு மற்றும் முடிவெடுத்தலுக்கான மத்திய மையமாக செயல்படுகிறது.
எரிபொருள் மேலாண்மை: தொடர்ந்து தடையில்லா மின்வசதி வழங்குவதற்கான வளங்களை நிர்வகித்து, மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதை விரைவுபடுத்துவதற்கு, ஒட்டுமொத்த மீட்சியை விரைவுபடுத்துவதற்குப் போதுமான நிதி வழங்கப்பட்டது.
மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடனான ஒருங்கிணைப்பு வளம் மற்றும் நிபுணத்துவப் பகிர்வை எளிதாக்கியது, மேலும் திறமையான மறுசீரமைப்பு செயல்முறையை உறுதி செய்கிறது.
பிஎஸ்என்எல் சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது, நெருக்கடியின் போது மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பித்தல்
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நிலையான மறுசீரமைப்பு நடைமுறைகள் மற்றும் எதிர்கால பேரிடர் நடவடிக்கை உத்திகள்
உத்திப்பூர்வமான கையிருப்பு: அவசர காலங்களில் விரைவான வரிசைப்படுத்தலை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய தொலைத்தொடர்பு உபகரணங்கள் உத்திப்பூர்வரீதியாக கையிருப்பு செய்யப்பட்டன.
சூறாவளி தாக்கத்தை எதிர்நோக்குதல் மற்றும் தணித்தல்;
மிக்ஜாம் சூறாவளியை எதிர்பார்த்து, பிஎஸ்என்எல் சென்னை அனைத்து செயல்பாட்டு பகுதிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியது, சூறாவளி காலத்தில் நன்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உறுதி செய்து செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்தது.
பிஎஸ்என்எல் சென்னை மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகள் பேரிடர் மேலாண்மைக்கான முழுமையான அணுகுமுறையை நிரூபிக்கின்றன.
மிக் ஜாம் சூறாவளி முன்வைத்த சவால்களுக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், நேற்று சென்னை வந்த அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெள்ளத்தால் பாதித்த சென்னை மக்களின் நிலை கண்டு பிரதமர் மிகுந்த வெதனையடைந்ததாகவும் அதனால் மத்திய அமைச்சர்களை நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியும் உடனடியாக வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். இலட்ச ருபாய் முதல் போட்டு
கோடியில் வங்கியில் கடன் வாங்கி சூப்பர் பில்டர் கட்டிய வீடு, வெளியே விலை உயர்ந்த கார்கள், பைகளில் கிரெடிட் கார்டுகள், நவீன அலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குழந்தைகளுக்கு கான்வென்ட் படிப்பு பாசுமதியும் பிட்சாவும் தான் சாப்பாடு, கிராம வாழ்வை எதிர்த்து நகர வாழ்க்கைக்கு மாறிவந்த குடும்பங்களில் ஆனந்தமாக சென்ற வாழ்வை அசைத்துப் பார்த்தது அந்த மழை.புயல் வெள்ளம் சூழ்ந்தது வீடும் உதவவில்லை விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை கார்டுகளும் பயன்தரவில்லை அலை பேசிகளும் உதவவில்லை சொந்தங்களை அணுகமுடியவில்லை உதவியது - மழைக்கும் ஒதுங்காத கார்பரேஷன் பள்ளிகள் உயிர்கொடுத்தது நிவாரண உணவு இதுதான் நிதர்சனம் இதுதான் உண்மை
இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால் இருப்பதும் இல்லாமல்போய் விடும் இன்றைய தலைமுறைக்கு
இது ஒரு எச்சரிக்கை.. முன்பெல்லாம் மாதம் மூன்று நாள் மழை பெய்த நிலை உண்டு கார்த்திகை மாதம் மழை பெய்வது விவசாயிகள் மகிழ்வு தரும் நிகழ்வு 15 நாட்கள் கூட தூரல் இருந்துகொண்டே இருக்கும். பருவநிலைகளின் மாறுபாட்டால் மூன்று மாதத்தில் பொழியவேண்டிய மழை மூன்று நாட்களில் பொழிகிறது. எத்தனை கட்டமைப்பை கொண்டிருக்கும் நாடுகள் என்றாலும் அதிகனமழை பொழியும் போது சமாளிப்பது கடினம். உயிர்கள் வாழ இந்த பூமி பல கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது. மனிதனின் பேராசை, சொகுசு வாழ்க்கை எந்தளவு இயற்கையை சீரழித்திருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். வளர்ச்சி எல்லாம் ஒரு அளவிற்குள் இருக்கவேண்டும். இனி அதீத வளர்ச்சி என்பது பூமியில் உயிர்கள் வாழ்வாதையே கேள்விக்குறியாக்கிவிடும். வளர்ச்சிக்கும் ஒரு வரைமுறை வேண்டும். எல்லை வேண்டும். இல்லையென்றால் இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு இருந்துகொண்டே இருக்கவேண்டும்.பல்லாவரம் பெரிய ஏரி கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்திலிருக்கிறது. கீழகட்டளை ஏரி கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நாராயணபுரம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரிகளிலிருந்து நிரம்பி வரும் மழை நீர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து வரும் மழை நீர் அனைத்தும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை வந்தடைகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கிட்டத்தட்ட கடல் மட்டத்தின் அளவிலேயே அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் ஒக்கியம் துரைப்பாக்கம் அருகில் உள்ள மதகு வழியாக பக்கிங்ஹாம் கால்வாயை அடைந்து அங்கிருந்து முட்டுக்காடு வழியாக வங்காள விரிகுடா கடலைச் சென்றடைகிறது. அதுவே நீர்வழிப்பாதை,
இந்த ஒக்கியம் மதகுப் பகுதியில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட செடிகளை டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அகற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக அக்டோபர் மாதத்தில் ஒரு முறை சுத்தம் செய்ததாகவும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது. அதாவது புயல் வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு சுத்தம் செய்திருக்கிறார்கள். வெள்ள நீர் வெளியேறுவதற்கு முக்கியமான இந்தப் பகுதியில் நிரந்தரமாக இயந்திரங்களை நிறுத்தி தினசரி தூர்வாரிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் வேளச்சேரி பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகு அங்கே ஏன் வெள்ள நீர் வடியவில்லை என்று பொறுமையாக ஆராய்ச்சி செய்து இந்த பகுதியை கண்டுபிடித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார்கள். இங்கே செடிகளை அகற்றிய பிறகு தான் வேளச்சேரி பகுதியில் வெள்ள நீர் முழுமையாக வடியத் தொடங்கியது.
இந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து இன்றல்ல 2016 ஆம் வருடத்திலேயே அறப்போர் இயக்கம் அதிமுக அரசுக்கும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கும் ஆய்வறிக்கையைஅனுப்பியுள்ளது. அதை எல்லாம் படித்து பார்த்து முன் எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டிருந்தால் புயல் முடிந்தவுடன் வெள்ளத்தை வெளியேற்றி இருக்கலாம். மக்கள் இத்தனை இன்னல்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள்.
வரலாறு காணாத மழை வந்தால் மக்கள் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என இனியும் சொல்லிக் கொண்டு இருக்காமல் எந்த மழை வந்தாலும் மக்களுக்கு எந்த இன்னல்களும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் செயல் படுத்துவதே நல் அரசு செய்யும் செயலாகும்.
போரூர் ஏரியை சாரய ராமசாமி உடையார் மகன் வெங்கடாஜலம் வசம் உள்ளது ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமணை யாக உள்ளது, பொத்தேரியை செங்கல்வராயநாயக்கர் கல்லூரி ஊவேரி கணக்கு ஆசிரியராக 1980 ஆம் ஆண்டு வரை இருந்து இன்று நிகர் நிலைப் பல்கலைகழகம் சொந்தமாக உடைய பாரிவேந்தர் என்ற பச்சைமுத்து உடையார் நடத்தும் SRM கல்லூரியாக உள்ளது,
கூவம் ஆறு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.சண்முகம் நடத்தும் மருத்துவக் கல்லூரியாக உள்ளது,
பல்லாவரம் ஏரி நடிகர் ஐசரிவேலன் மகனான ஐசரி கணேஷ் நடத்தும் வேல்ஸ் பல்கலைக்கழகம், அடுத்து ஜேப்பியார் நடத்தும் சத்தியபாமா பல்கலைக்கழகம், கேரளத்து நடிகைகள் அம்பிகா,, ராதா ,சரசம்மா ஆகிய மலையாளம் பேசும் குடும்பத்தினருக்கு எம் ஜி ஆர் வழங்கிய வளசரவாக்கம் ஏரி நீர்பிடிப்பு நிலம் ARS ஸ்டுடியோ டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோவாக இருந்து தற்போது அடுக்குமாடிக் குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் ஆட்சிக் காலத்தில் வழங்கித் தாரை வார்த்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்களாகும் அரசாணை 540 மற்றும் ஸ்டான்டிங் ஆர்டர்கள் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகள் எதுவும் இவர்களை இன்று வரை இந்த நீர்ப்பிடி ஏரி நில மோசடியை அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்தவில்லை அரசு இயந்திரம், இதில் பொது நீதி யாதெனில்
சென்னையை நீர்நிலை ஆக்கிரமித்துச் சீரழித்த பெருமைக்குரியவர் முதல்வர்கள் எம்ஜி ஆர் சிறுதாவூரில், பையனூரில் ஜெ.ஜெயலலிதா செய்த பங்களாக்கள் எல்லாமே கழிமுக நீர்பிடிப்பு பகுதியாகும் ஆகவே சாமானிய மக்களை மட்டுமே சட்டம் கட்டுப்படுத்த இவர்களின் ஆக்கிரமிப்பே இந்த சேதாரங்களுக்கு முழுக் காரணம் ஆகிறது,
கருத்துகள்