இராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பார்
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் குறித்து பல சுற்றுப் பரபரப்பான விவாதங்களுக்குப் பின். முதலமைச்சராக சங்கனேர் சட்டமன்ற உறுப்பினரான பஜன்லால் ஷர்மா இன்று அறிவிக்கப்பட்டார்.நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட பாஜக வின் மத்தியப் பார்வையாளர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த பாஜகவின் சட்டமன்றக் கட்சிக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 115 சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தனர்.
முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பெயர்கள் பிரபலமாக இருந்தன. பாஜகவின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரமோத் வசிஷ்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சிப் பார்வையாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேருக்கு நேராகப் பேசினர்.
பதவிக்கான முன்னணியிலிருக்கும் வசுந்திரா ராஜே, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதிலிருந்து, 30 முதல் 40 சட்டமன்ற உறுப்பினர்களை அங்குள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கட்சித் தலைமைக்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளார். இரண்டு முறை முதல்வர் மற்றும் அவரது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரான மகன் துஷ்யந்த் சிங்கும் கடந்த வாரம் ஒரு ரிசார்ட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை கூட்டிச் சென்றதாகக் கூறி அரசியல் செய்ய இறங்கினார்.
ராஜஸ்தானில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் எந்த ஒரு தேர்தல் கூட்டங்களிலும், சாலை நிகழ்ச்சிகளிலும் காணப்படாத இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாவின் பெயரும் அதில் வேகம் பிடித்தது.ஆல்வாரை பிரதிநிதித்துவப்படுத்தும் பாபா பாலக்நாத் பற்றிய செய்திகளும் பரவலாக வந்த வண்ணம் உள்ளன.
கருத்துகள்