ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த பிரச்சாரகரும், விஜயபாரதம் வார இதழின் முன்னாள் ஆசிரியருமான சேவாபாரதி தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட போது அதன் பகுதி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த நமது ஆருயிர் அண்ணன் சுந்தர.ஜோதி ஜி நேற்றுக் காலமான செய்தி மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
ரயில் விபத்தில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது, 68.. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுந்தரஜோதி, 1978 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் அதாவது முழுநேர ஊழியராவார், பின்னர் 17 ஆண்டு கள் திருவண்ணாமலை, வேலுார், ராமேஸ்வரம் பகுதிகளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பணிகளில் ஈடுபட்டார் எமது வீட்டிற்கு 1990 ஆம் ஆண்டு வந்த போது அவருக்கு எனது பாட்டி உணவு பரிமாறிய நிகழ்வை அடிக்கடி நினைவு கூர்ந்ததை இப்போது நான் நினைக்கிறேன் அதுவே நான் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலியாக இருக்கும் அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரட்டும் சேத்துப்பட்டு பஞ்சவடி எம்வி நாயுடு தெருவில் முதல் சந்திப்பு நம் நினைவில் நிழலாடுகிறது
மிகச் சிறந்த அண்ணன்களில் ஒருவரை இழந்திருக்கிறேன். இராமநாதபுரம் கோட்டத்தில் அவர் கோட்டத்தினுடைய அமைப்பாளர் மேலும் காரைக்குடி ஐந்து விளக்கில் சிறிய அறையில் தங்கி அக்காலகட்டத்தில் RSS வளர்த்த பிரமுகர் . நேற்று மாலை 5:00 மணியளவில் ஓட்டேரி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. சுந்தரஜோதியின் மறைவுக்கு ஆர்.எஸ.எஸ் தலைவர்கள் தத்தாத்ரேயா உள்ளிட்ட பலர் இறங்கல் தெரிவித்தனர் எப்போதும் நினைவில் வாழ்வார்.
கருத்துகள்