ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து விழாக் கமிட்டியினருடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை
2024 தை மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து விழாக் கமிட்டியினருடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்
மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் தை மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மாநகராட்சி ஆணையர், மாநகரக் காவல் துறை ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட
ஆலோசனைகஹ கூட்டத்தில் கே.கே. கண்ணன் என்பவர் ஒவ்வொரு முறையும் தென்கால் பாசன விவசாயிகளின் சார்பாகவே ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் இடையூறு விளைவித்து கடந்த மூன்றாண்டுகளாக மாவட்ட நிர்வாகமே நடத்தி வருகிறது. கிராம முறைப்படி எங்கள் சங்கமே ஜல்லிக்கட்டு நடத்த தாங்கள் அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.
ஜல்லிக்கட்டுக் காளையின் உரிமையாளர்களைப் பொறுத்தவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக டோக்கன் வழங்கப்பட்டாலும் கூட வரிசையில் மாடுகள் செல்லாமல் கடைசியில் இருக்கக்கூடிய மாடுகள் கூட முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை காரணமான குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மாநகரக் காவல்துறை ஆணையர் லோகநாதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக
மேற்கொள்ளப்படுமெனவும் எந்தவிதக் குளறுபடிகளுக்கும் இந்த முறை வாய்ப்பிருக்காது. விழா குழுவினரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார். ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் https://www.getstatusalert.in/jallikattu-online-registration-2023-madurai-nic-in/நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடைபெறும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்