காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தின் வல்லுநர்கள் குழுவினர் படித்துறைகள், சுப்ரமணிய பாரதியின் இல்லம் மற்றும் காஞ்சி மடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தின் கோதாவரி தொழில் வல்லுநர்கள் குழுவினரின் ஹனுமான் படித்துறையைப் பார்வையிட்டனர்.
இந்தக் குழுவினர், வாரணாசியில் உள்ள பல்வேறு படித்துறைகளின் வரலாற்றை ஆச்சார்யாக்களிடமிருந்து கேட்டறிந்தனர். படித்துறைகளில் அமைந்துள்ள பழமையான கோவில்களையும் குழுவின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
பின்னர், ஹனுமான் படித்துறையில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதியின் இல்லத்துக்குச் சென்ற குழுவினர், அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர். காஞ்சி மடத்திற்கும் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொண்டனர்.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் 2023, டிசம்பர் 30-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்டம் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற்றது. இந்த இரண்டாவது கட்டத்திற்கு தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள் வீதம் கிட்டத்தட்ட 1400 பேர் வரவுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய முதல் மூன்று குழுக்கள் ஏற்கனவே வாரணாசிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் காசியில் தங்கியிருக்கும் போது, அவர்களது சுற்றுப்பயணத்தின்படி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்ல உள்ளனர்.
கருத்துகள்