2021 ஆம் ஆண்டு, எடப்பாடி கே பழனிசாமி முதலமைச்சராக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு சிறப்பு டிஜிபி யான ராஜேஸ் தாஸுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ராஜேஸ் தாஸ், தமிழகத்தின் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷின் கணவராவார். அப்போதய சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகச் சென்ற போது நடந்த சம்பவம் இது. ''வாங்க காரில் வந்து ஏறுங்க.. சில விஷயங்கள் உங்ககிட்ட பேசணும் என்று கூறி பெரம்பலூரிலிருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏற்றி கொண்டு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பயணித்தார். சென்னை விரைகிறார். ஆனால் அவர் செங்கல்பட்டு அருகில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு காவல்துறையின் படை அவரை வழிமறித்து அவரது கார் சாவியைப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது,
மேலும் அப்போது புகார் கொடுக்க வேண்டாமென்று சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் சொல்லி, புகார் கொடுக்கக் கிளம்பினாராம். ஆனால் அவரை புகார் கொடுக்கப் போகவிடாமல் அங்கிருந்த அதிகாரி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அவர் டெல்லி வரை தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லவும், அவரைத் தடுக்க வேண்டாம் என உத்தரவு பறக்கிறது. இதையடுத்து அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் விட்டுவிடுகிறார்.
அதைத் தொடர்ந்து அன்று டிஜிபி யான திரிபாதி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் தனக்கு நடந்தவற்றை அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாராக தெரிவித்தார். புகாரின் பேரில் விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் மற்றும் செங்கல்பட்டுக்கு அப்போதிருந்த கண்காணிப்பாளர் ஆகியோர் மீது சிபிசிஐடி காநல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த இரண்டரை ஆண்டு காலமாக நடந்து வந்தது. அரசு தரப்பில் 68 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை முடிவுற்ற நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார். அதன்படி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். அதன்பின் கட்டாய பணி ஓய்வு தமிழக உள்துறைச் செயலகம் சார்பில் வழங்கியது இந்த நிலையில் தற்போது பீஃலா ராஜேஷ் என்று பெருமையுடன் பெயரை வைத்துக் கொண்டவர் இன்று பீலா வெங்கடேசன் என்று மாற்றும் நிலை.
பீலா ராஜேஷ் IAS கொரானா பரவல் காலத்தில் மாநில சுகாதாரத்துறையின் செயலாளர் தினம் சேலையில் மிகக் கம்பீரமாக தொலைகாட்சிகளில் பார்க்கலாம் .நாடார் குடும்பத்தில் பிறந்தவர். தாயார் ராணி காங்கிரஸ் கடயசியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தந்தை வெங்கடேசன் IPS அதிகாரி
கணவர் வட இந்திய ராஜேஸ் தாஸ் IPS .இவரைப் பற்றிய அண்மைச் செய்திகள் தான் மேல கண்டவை அனைவருக்கும் தெரிந்ததே.
பீஃலா ஒரு தமிழரை கணவராக தேர்ந்தெடுத்திருக்கலாம்.
தற்போது பெயர் மாறும் நிலை வந்திருக்காது.
கருத்துகள்