ஈரோடு குலுங்கியது உளவுத்துறை தகவல்
கோபிச்செட்டிப்பாளையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வஜ்ரா வாகனங்களுடன், 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு.
கோபிசெட்டிபாளையத்திற்கு அருகிலுள்ள கடுக்கம்பாளையத்தில் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட திருடர்களைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீது பொய்யான SC/ST act & வன்கொடுமை தடுப்பு (PCR) சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து வைகுண்டெழுந்த பொதுமக்கள், விவசாயிகள், கடை உரிமையாளர்கள், நிறுவன அதிபர்கள் என ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம் என சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிக் குவிந்து விடுவார்கள் என உளவுத்துறைத் தகவல் ஈரோடு மாவட்டத்தையே கலங்கவும் குலுங்கவும் வைத்துள்ளது. இதையடுத்து மூன்று நாள் முன் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து பொதுமக்கள் மீது பதியப்பட்ட பொய்யான SC/ST act & வன்கொடுமை தடுப்பு (PCR) வழக்கு உடனடியாக இரத்து செய்யப்பட்டது.
கருத்துகள்