முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை மக்கள் வாழ்வியல் கிளாம்பாக்கத்திற்கும், திருமழிசைக்கும் மாறும் நிலை

சென்னையின் வளர்ச்சி கோயம்பேடுடன் முடிந்து விடும் என்று எண்ணி செயல்பட்ட நிலையில் வந்தது மாற்றம் 

1999-ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரும் ஏரியை மூடி பேருந்து நிலையம் என்றும், அதற்கடுத்து அதிமுக ஆட்சியில் தெற்காசிய விளையாட்டு வீரர்கள் குடியிருப்பு என்றும் அமைத்தார்கள். அதுவாவது போட்டி முடிந்த உடன் குடிமை பணியாளர்களுக்கும் ஏனையோருக்கும் பயன்படும் வகையில் தற்போது மாறி விட்டது. 

தற்போது காய்கறிச் சந்தையும் கோயம்பேடிலிருந்து மாற்றப்படப் போவதாகத் திட்டம் உள்ளதாம். 

பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கும், காய்கறிச் சந்தையை திருமழிசைக்கும் மாற்றுகிறோமே, இதனால் என்னென்ன பாதிப்புகள் நிகழும் என்ற திட்டம் வகுக்கப்பட்டிக்கலாம் 

ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் என்பதில் ஒரு பெரு நகர வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காகவே அரசு ஒரு நிறுவனத்தை நடத்துகிறது. இதே கோயம்பேடு 

1999 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தி 2000-ஆம் ஆண்டில் முடித்தீர்கள். வளர்ச்சி நாலா பக்கமும் நிகழத் துவங்காமல் சென்னையில் தெற்கிலும், மேற்கிலும் படுபயங்கரமாக நிகழ்ந்தது. குறிப்பாக மகேந்திரா நகரம் என தனியார் மென்பொருள் நகரத்திற்காக ஒரு ஊராட்சியே தத்தெடுக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்குத் தரப்பட்டது. 

இது  நடந்த காலகட்டம் தான் 1999 ஆம் ஆண்டு முதல் 2010.ஆம் ஆண்டு வரை

அதற்குப்பின்பு  மாநகர இருப்பூர்தி திட்டம்  கோயம்பேடை மையமாக வைத்து 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு  காலகட்டம் வரை  அவசரமாக அமைந்த பல பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அனைத்தையும் சரி செய்து, சென்னை சங்கமம் நடத்தி உடனே மாநகர இருப்பூர்தி திட்டம்  என அனைத்தையும் பூட்டி, இடித்து தோண்டி மாற்றம்  செய்தார்கள். அந்த வகையில் பல்லாயிரம் கோடிகளில் நடந்த ஊழல் ஒருபுறம் இருந்தாலும். 

இதோ தற்போது கிளாம்பாக்கத்திற்கு சென்னை தண்டையார் பேட்டையிலிருந்து ஒருவர் கிளம்பிச் செல்ல எத்தனை மணி நேரம் ஆகும். அதற்கான தொகை எவ்வளவு. பேருந்து நிலையத்தை அடையும் தூரமும் பயணத் தூரமும் கிட்டத்தட்ட சரி சமமாகவே அமையப் போகிறது. 

இனிமேல்  சென்னைப் புறநகர் இருப்பூர்திகளில் கூட்டம்  அதிகரிக்கப் போகிறது. கோயம்பேடு பகுதியைச் சுற்றி முதலீடு செய்த தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் நிலை சில கோடிகள் இழப்பாகும்.

அதைச் சுற்றி உருவாக்கப்பட்ட பல சைவ அசைவ வர்க்க உணவகங்கள், தானி ஓட்டுநர்கள் வாழ்வு இப்படி பல வகையான இன்னல்களை, வாழ்வாதார இழப்பை சந்தித்தே ஆக வேண்டும்  கோயம்பேடு பேருந்து நிலைய போக்குவரத்திற்காகக் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் 

ஏற்கனவே விழா காலங்களில் பெரும் தெற்கு சாலை எனும் Grand South Trunk Road தற்போதே  விழி பிதுங்குகிறது. பெருங்களத்தூரில் அல்லல் பட்டவர்களுக்கே அதன் அவதி தெரியும். இருப்பூர்தி நிலையமும் 2024- ஆம் ஆண்டின் இறுதியில் தான் துவக்கப்படும் என்கிறார்கள். அதிமுக 2013-ல் திட்டம் தீட்டி எடப்பாடி கே.பழனிச்சாமி அரசு செய்த ஊழல் 2017 ஆம் ஆண்டு ஏலம் விட்ட போதே மத்திய அரசுடன் இருந்த நட்பைப் பயன்படுத்தி இருப்பூர்தி நிலையத்த்தையும் அப்போதே கட்டத் துவங்கினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இருப்பூர்தி நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும். 

சமீபகாலமாக ஒவ்வொரு மழைக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வாசலில் 5 அடிக்கு தண்ணீர் நிற்பதைக் காட்டுகிறாரகள். அதற்கென்ன தீர்வைக் கண்டார்கள். 

முன்னால் முதல்வர்  கலைஞர் மு.கருணாநிதி பெயரை வைத்தாலும் நூற்றாண்டு நினைவென்று சூட்டியுள்ளார்கள். 

சென்னையிலிருந்து தலை நகரம் திருச்சிராப்பள்ளி செல்லாத வரை எல்லா சூழலியல் சீர்கேடும், சென்னையில் வாழ்வாதாரப் பேரழிவு நிகழ்ந்து கொண்டு தானிருக்கும். 

சென்னை என்ற பெயரில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் நிலப்பரப்பைச் சேர்த்து பெருநகர மாநகராட்சி என ஊழலில் திளைத்ததும்.

 தலைநகர மாற்றமும், கணினி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அணைத்தும் ஏனைய மாவட்டத்திற்கு மாறுவதே தமிழகத்திற்கு விமோசனமாக  இருக்கும்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதல்முறையாக 15 வருடத்துக்கு இப்பேருந்து முனையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பினை ஒரு தனி செயல்பாட்டாளரிடம் ஒப்பந்த வாயிலாக வழங்கப்பட்டுள்ளது  பூங்காக்கள், நீர் வளங்கள், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, முக அடையாளம் காட்டும் கேமிராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு முறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு MTC அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர பரப்பளவில் 60 பேருந்துகளை  நிறுத்தும் வசதியுடன் மாநகரப் போக்குவரத்துக் கழக முனையம் ஜி.எஸ்.டி சாலையை யொட்டி அமைக்கப்பட்டுள்ளது.        ஒரேநாளில் 2310 பேருந்துகளை இந்த முனையத்திலிருந்து இயக்க முடியும். சுமார் 800 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான வசதியும், அரசுப் பேருந்துகளுக்கான டீசல் நிரப்பும் வசதியும் செய்யப்பட்ட து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகரப் பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்தப் பேருந்து நிலையம் அமைந்துள்ளது  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 130 அரசு பேருந்துகளையும், 85 தனியார் பேருந்துகளையும் நிறுத்த முடியும்.|SETC, TNSTC, ஆம்னி பேருந்துகளுக்கு 16 நடைமேடைகளைக் கொண்ட 215 பேருந்து நிறுத்தும்  தளங்கள்உம் அமைந்துள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மகளிர்களின் வசதிக்கு  பாலூட்டும் அறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனித்தனியாக 140 (100+40) ஓய்வறைகள், ஓட்டுநர்களுக்குத் தனியாக 340 ஓய்வறைகள் (படுக்கை வசதியுடன்), ஏடிஎம் வசதி, வரைபட வசதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கான ஒப்பனை அறைகள், குடிநீர் வசதிகள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.             பேருந்து முனையத்தில் 100. வியாபரக் கடைகள், இரண்டு அடி தளங்களில் 2769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள், தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையமும் அமைந்துள்ளன ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கான ஒப்பனை அறைகள், குடிநீர் வசதிகள், இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. பயண சீட்டு பெறுமிடம், பயணிகளின் உடமைகளை எடுத்துச் செல்ல கை வண்டிகள், மின் வாகனங்கள், தூய்மை இயந்திரங்கள், மின் தூக்கிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு உணர்வு தரையமைப்பு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.|தமிழகத்திலேயே மிகப் பெரிய பேருந்து முனையம் இதுவே. 88.52 ஏக்கரில் இப்புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் செறிவூட்டப்பட்டுள்ளது  சென்னை மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து  செல்ல எதுவாக சென்னை மாநகரின் பல இடங்களுக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்தும்  இயக்கப்படவுள்ளது. இரவு நேரப் பேருந்துகளுக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.      கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையத்திலிருந்தே இனி தென் மாவட்டங்களுக்குச்  செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும். மதுரை போலவே வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிந்து திறக்கப்பட்டது                  2000. க்கு பிறகு வேளச்சேரி பகுதிகளில் ஐடி கம்பெனிகள் வேகமாக .வளர்ந்ததால், அதனை சுற்றியுள்ள கந்தன்சாவடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பல்லாவரம், குராம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் தாங்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கம் அதிகரித்ததனால் வடபழனி சாலையை விட கடுமையான நெரிசலை ஜிஎஸ்டி சாலை சந்தித்தது. குறிப்பாக பெருங்களத்தூர் முதல் ஆலந்தூர் வரை எத்தனை பாலம் போட்டாலும் மக்கள் நெருக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

குரோம்பேட்டை யிலிருந்து  துரைப்பாக்கம் (ஓஎம்ஆர், திருவான்மியூர், வேளச்சேரி) செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்ட போதும், மேம்பாலத்திலேயே சிக்னல் போட வேண்டிய அளவிற்கு வாகன நெருக்கம் அதிகரித்தது. சென்னை நகரத்தை விட தாம்பரத்திலிருந்து  வேளச்சேரி, தாம்பரத்திலிருந்து  ஆலந்தூர் பகுதிகளில் வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. காலை, மாலை வேளைகளில் வாகனம் ஒட்டவே முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாகியுள்ள சூழலில் ஆம்னிப் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் இந்த வழியாகவே தினமும் பயணிப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது"  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பிய தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அருகில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

இந்த கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. துறைமுகம் செல்லும் லாரிகள், மீஞ்சூர் வெளிவட்டச் சாலை, தாம்பரம் பெருங்களத்தூர் சாலை, காஞ்சிபுரம் வண்டலூர் சாலை, கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் பூங்கா, செங்கல்பட்டு திருச்சிராப்பள்ளி  சாலை ஆகியவை இணையுமிடத்திலிருக்கிறது. சென்னைக்கு இங்கிருந்து எந்தப் பகுதிக்கும் போக முடியுமென்பதால் கிளாம்பாக்கத்தை தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்துகள் நேரடியாக உள்ளே வர மேம்பாலம் அமைக்கப்படவில்லை. ரயில் நிலையமும் அமைக்கப்படவில்லை. வண்டலூரில் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி மாறித்தான் வர வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...