பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பொது அமைதியைக் கெடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு,
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் கன்னியாகுமரியில் துவங்கிய `என் மண் என் மக்கள்’ யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் கடந்த சில நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, லூர்துபுரத்திலுள்ள கிருஷ்தவ மிஷன் லூர்து அன்னை சர்ச்சுக்கு
அவரது கட்சியினருடன் சென்ற போது அங்கு அண்ணாமலையை சில நபர்கள் உள்ளே வரக்கூடாதென்று கண்டனம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
`இது புனிதமான இடம் நீங்கள் வந்து மாலை போடக்கூடாது..!’ என்றதற்கு அண்ணாமலை, `எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்தேன்’ என்றார். அதற்கு அந்த நபர்கள், `எல்லோரும் நல்லா இருக்கணும் என்று கூறும் நீங்கள் கிறிஸ்துவ மக்களை வதைப்பது ஏன்? பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசின் சலுகைகளை வழங்க மறுப்பது ஏன்?’ என்று கேள்விகளை முன் வைத்ததனால் அதற்கு அண்ணாமலை,
``இலங்கையில் 2009-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இறந்த போது, நீங்கள் எங்கே போனீர்கள். கட்சிக்காரர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக, நீங்கள் இப்படிச் செய்கிறீர்கள். இங்கே என்னை வரக்கூடாது எனத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
இந்த ஆலயம் உங்கள் பெயரில் இருக்கிறதா. நான் தர்ணாவில் ஈடுபட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்டார். அதற்கு இளைஞர்கள் இங்கு வரக்கூடாது.. இது எங்களுக்கான சர்ச் என்றனர். அப்போது அண்ணாமலையுடன் வாக்குவாதம் செய்த நபர் ஒருவரை பாதுகாப்புக்கு வந்த காவல்துறை யினர் அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.. அப்போது சிலர், `அண்ணாமலை வெளியே போ. பிஜேபியே வெளியே போ. எனக் கோஷமிட்ட நிலையில் நேற்று முன்தினம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததில், `கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரத்தை ஏற்படுத்துவது, பொது அமைதியைக் குலைப்பது, பொது அமைதிக்கு எதிராகப் பேசுவது’ என, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மற்றொரு பக்கம் அண்ணாமலையுடன் பிரச்னையில் ஈடுப்பட்ட கார்த்திக் எனும் நபர் திமுக இளைஞர் அணியைச் சார்ந்தவர் என்றும், அமைச்சர் உதயநிதியும் அவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதனால் திமுக தான் இதனை திட்டமிட்டு பிரச்சனையை கிளப்பிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் கருத்தாக வந்த தகவலில் கிறிஸ்துவ மதத்தின் கடவுளை வணங்கி வழிபடச் சென்ற திரு.அண்ணாமலை அவர்கள் மீது பொது அமைதியைக் குலைக்க முயன்றதாக வழக்கு தொடுத்துள்ளது தமிழக அரசு. கடவுள் அனைவருக்கும் சமம், அனைவருக்கும் ஆலய பிரவேசம் உரிமை எனும் போது, அண்ணாமலையை தடுத்து நிறுத்த எத்தனித்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டியதற்கு மாறாக, அண்ணாமலை அவர்களை மிரட்டிப் பார்ப்பது சட்ட விரோதம். கடவுளை வணங்கச் சென்ற, கிருஸ்துவ மதத்தை போற்றச் சென்ற அண்ணாமலை அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதும், ஹிந்து மதத்தை (சனாதன தர்மத்தை) ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினைப் போற்றுவதும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ! தி மு க அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விடச் சான்று தேவையா? என
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்
நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுளளார். இதில் பொதுநீதி யாதெனில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தவர்கள் ஹிந்து ஆலயங்களில் பணி செய்யும் மாற்று மதம் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதுவே நமது எழுவினா?
கருத்துகள்