சேவை மனப்பான்மையைப் பள்ளிப்பருவத்தில் இருந்தே கற்றுக்கொள்ள வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப்பயண நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது
மாணவர்கள் சேவை மனப்பான்மையைப் பள்ளிப் பருவத்தில் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும். பிற்கால வாழ்க்கையில் தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மற்றவர்களுக்காக செலவிட திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தான் என்று மட்டும் நினைக்காமல் தன்னுடன் மற்றவர்களும் என்று மதித்து வாழும் வாழ்க்கையே சிறந்தது என்று லாஸ்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.வைத்தியநாதன் கூறினார்.
நேரு யுவ கேந்திரா சார்பில் இன்று புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியபோது திரு வைத்தியநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளர் திரு க.மாறன் தனது உரையில், ஆண்டு தோறும் இந்தியாவில் சாலை விபத்து மூலம் சராசரியாக 1,50,000 பேர் இறக்கின்றனர் என்றும் சுமார் 5 லட்சம் பேர் காயமடைகின்றனர் என்றும் குறிப்பிட்டார். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனங்களை எடுக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களை எடுக்கும் போது சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் திரு மாறன் அறிவுறுத்தினார்.
மத்திய தகவல் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் சிவக்குமார் 2047 இல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
விக்சித் பாரத் @2047 பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
நிகழ்ச்சியில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறந்த நேரு இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் விளையாட்டை இளைஞர்கள் நிகழ்த்திக் காட்டினார்.
பின்னர் நாசிக்கில் தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு ஆற்றிய உரை அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு இளையோர் மைய துணை இயக்குநர் திரு டி.தெய்வசிகாமணி செய்து இருந்தார்.
கருத்துகள்