தேங்காய் பவுடர் என ரூபாய். 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சில நபர்கள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்திச் செல்வதாக, டெல்லியிலுள்ள போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்புக் காவல் பிரிவுக்கு இரகசிய தகவல் வந்தது. அந்த
போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் சிக்கிய நபர் திமுக கட்சிப் பிரமுகராவார்.
டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருட்கள் கடத்திய வழக்கில் தமிழ்நாட்டில் திரைப்படத் துறைப் பிரபல நபரான அன்வர் உள்ளிட்ட மூன்று நபர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூபாய்.75 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
பின் நடந்த தொடர் விசாரணையில், போதைப்பொருட்களைக் செய்யும் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் எனத் தெரிந்தது. ஆகவே
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மங்கை எனும் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், தி.மு.க வின் சென்னை மேற்கு மாவட்ட அணியின் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் சிக்கியது தெரிந்த பின் அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதன்பின் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து அறிவிப்பு வந்தது, இயல்பாகவே தற்காலிக நீக்கம் என்பது தானே கட்சியின் கொள்கை கோட்பாடு. மூன்றாண்டுகளாக இன்டர்நேஷனல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தற்போது சிக்கிய திமுக நிர்வாகி
ஜாபர் சாதிக். நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிடமிருந்து விருது வாங்கும் புகைப்படம் தற்போது அதிகம் நபர்களால் பகிரப்படும் நிலையில் நடிகர் கமலஹாசனுடன்
ஜாபர் உள்ள படமும் அதில் ஒன்றாகும்.போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்ட நபர்கள் எடுக்கும் திரைப்படம்
"இறைவன் மிகப்பெரியவன்" திரைப்படத்தின் இயக்குனர்: அமீர் தயாரிப்பாளர்: சாதிக் படத்தின்
கதாநாயகன்: சாதிக்கின் தம்பி மைதீன்
கருத்துகள்