தமிழ்நாடு பாஜக, மதுரை மாவட்ட OBC அணி சக்திவேல் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை
மதுரை தேவர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35). இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்டச் செயலாளராவார் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் மோட்டார் இருசக்கர வாகணத்தில் சென்று கொண்டிருந்த போது அவரைப் டூவீலரில் பின் தொடர்ந்த கும்பல் வழிமறித்து, சக்திவேலை வெட்டிக்கொலை செய்தது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டவர் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை மற்றொரு இருசக்ககர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த கும்பல் வழிமறித்து, வெட்டிக்கொலை செய்தது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது
இந்தக் கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த அண்ணாநகர் காவல் துறையினர், சென்று சக்திவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாகவே கொலைச் சம்பவம் நிகழ்ந்ததாகக் தெரிகிறது.
கருத்துகள்