புகழ் பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
புகழ்பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் அமீன் சயானி முக்கியப் பங்காற்றியதாகவும், தமது படைப்புகள் மூலம் நேயர்களிடையே சிறப்பான பிணைப்பை வளர்த்ததாகவும் திரு மோடி கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"வானொலியில் திரு அமீன் சயானியின் குரல் வசீகரம் மற்றும் இனிமையைக் கொண்டதாக இருந்தது. அந்தக் குரலை தலைமுறைகளைக் கடந்து மக்கள் நேசிக்கின்றனர். தமது பணியின் மூலம், இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். நேயர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் பிணைப்பை அவர் வளர்த்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நேயர்கள் மற்றும் அனைத்து வானொலி ஆர்வலர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
கருத்துகள்