பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்,
இது ஃபெர்சிய நாட்டிலிருந்து இந்தியாவின் மும்பையில் குடியேரியவர்கள் தான் பார்சிக்கள், அங்கு பல கார்ப்பரேட்டுகளின் கம்பெனி வழக்கறிஞர்கள் எல்லோரும் பார்சிக்கள் தான் அதில் ஐந்து கோடி ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்கள் பலரும் அந்த இனக் குழுதான், அதில் முக்கியமானவர் மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் பரப்பன அஹ்ரஹார சிறையில் வாடிய முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை ஜாமீனில் .வெளிக் கொண்டு வந்தவர். பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார், பிரபல சட்ட அறிஞரும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஃபாலி நாரிமன் இன்று காலை டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2007 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 1971 ஆம் ஆண்டு முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19 வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் அவர் பல முன்னணித் தலைவர்களின் வழக்குகளை வாதிட்டுள்ளார். அவர் மத்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரலாக மே மாதம் 1972 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 1975 ஆம் ஆண்டு வரை இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இருந்தார்.
அக்டோபர் மாதம் 17, 2014 அன்று, அவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்காக ஆஜராகி, அவருக்கு ஜாமீன் பெற்றார், அது முன்பு நிராகரிக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முதல்வராக பதவி வகித்த காலத்தில் மாதம் ரூபாய் 1 தான் ஊதியமாகப் பெற்ற. செல்வி ஜெ.ஜெயலலிதா. 5 ஆண்டு கால முடிவில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 66.65 கோடி சொத்துக்கள் குவித்ததாக ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன் , ஜெ.இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகாலமாக நடந்து வந்ததில் 2014 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன் , இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா. அத்துடன் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவே அதிரும் வகையில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார் மைக்கேல் டி.குன்ஹா.
இந்த வழக்கில் 22 நாட்கள் சிறையிலிருந்த ஜெ.ஜெயலலிதா அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ஃ பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஃபாலி நாரிமன் செய்த சிறப்பான வாதங்கள் ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
பாலி நாரிமன் மும்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், அந்த பதவியை அவர் மரணம் வரை தக்க வைத்துக் கொண்டார். இவரின் மகன் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் இன்னொரு மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல போபால் விஷவாயு பேரழிவு வழக்கில் யூனியன் கார்பைடுக்கு ஆதரவாக நாரிமன் வாதிட்டார், அதை அவர் சமீப காலங்களில் தவறு என்று ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்