பண மோசடிப் புகார் பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி கைது: பாடலாசிரியர் சிநேகன் புகாரில் நடவடிக்கை
பண மோசடிப் புகாரில் நடிகையும்,பாரதிய ஜனதா கடசியின் நிர்வாகியுமான நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். அது குறித்து காவல்துறை சார்பில் கூறப்படுவது யதெனில் : திரைப்படப் பாடலாசிரியர் சிநேகன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததில், “சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வரும் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதை மறுத்ததோடு, நடிகை முறைப்படி பதிவு செய்து சினேகம் அறக்கட்டளை பெயரில் நற்பணிகளைச் செய்து வரும் தன் மீது அபாண்டமாகப் பழிசுமத்தி அவதூறு பரப்பும் பாடலாசிரியர் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நடிகை ஜெயலட்சுமியும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதையடுத்து, இரண்து தரப்பிலும் பலமுறை அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்தனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர். அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சிநேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் பேரில் திருமங்கலம் காவல் நிலையத்தில் சிநேகன் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் அதை இரத்து செய்யவேண்டுமென சிநேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து, பாடலாசிரியர் சிநேகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே சிநேகன் அளித்த புகாரின் பேரில், ஜெயலட்சுமி மீது திருமங்கலம் காவல் நிலையத்தினர் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து, திருமங்கலத்திலுள்ள நடிகை ஜெயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர். அப்போது, அவர்களுடன் நடிகை ஜெயலட்சுமி கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
கருத்துகள்