ஊடகம், பொழுதுபோக்கு தொழில்துறை செழித்து வளர்வதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது,
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (ஃபிக்கி) பிரேம்ஸின் 24-வது மாநாடு மும்பையில் இன்று தொடங்கியது. இந்த தொடக்க அமர்வில் மகாராஷ்டிர திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு மங்கள் பிரபாத் லோதா, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, நடிகை ராணி முகர்ஜி, ஃபிக்கி துணைத் தலைவர் திரு அனந்த் கோயங்கா, ஃபிக்கி ஊடகம், பொழுதுபோக்கு) குழுவின் தலைவர் திரு கெவின் வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிர அரசின் சார்பில் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்ற திரு மங்கள் பிரபாத் லோதா, இந்தியா போன்ற இளையோர் மிகுந்துள்ள நாட்டிற்கு எதிர்காலங்களில் திறன், மறுதிறன் பயிற்சி மிகவும் முக்கியத்துவம் பெறும் என்று கூறினார். திறன் துறையில் தொழில்துறை ஆதரவையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, நமது சமூகத்தை வடிவமைப்பதிலும், நமது கண்ணோட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், நமது கூட்டு முயற்சிகளை பிரதிபலிப்பதிலும் ஊடகம், பொழுதுப்போக்குப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது என்று கூறினார்.
தொழில்துறையின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்துள்ளது.
கருத்துகள்