2022, 2023 -ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை 94 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.
இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற, பழங்குடி கலைகள், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்த 94 சிறந்த கலைஞர்களுக்கு 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை (இரண்டு கூட்டு விருதுகள்) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள், கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வார்கள்.
2022, 2023-ம் ஆண்டுகளுக்கான அகாடமி விருதுகளைத் தவிர, 7 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு (ஒரு கூட்டு விருது) சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி ரத்னா) வழங்குவார். சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி ரத்னா) என்பது நிகழ்த்து கலை வடிவத்தில் கலைஞர்களுடைய விதிவிலக்கான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். அகாடமி விருதுகள் 1952 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்