போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கைது செய்தது.
தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ரூபாய்.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும்
ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சரியான நடவடிக்கை
ரூபாய் .2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும்
ஜாபர் சாதிக் கைது இதன் முழு பின்புலம் இனி வெளிவரலாம்
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக டெல்லியிலுள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது தொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியிலுள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அங்கு நுழைந்த காவல்துறையினர், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய முவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய். 2,000 கோடியாகும். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான
ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டததையடுத்து, திமுகவிலிருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்ட நிலையில், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்குத் தொடர்பாக, NCB அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு , பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்
திமுகவில் NRI அணியில் பொறுப்பாளர் ஆக்கிய மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், புதுக்கோட்டை பிரமுகருமான அப்துல்லா வெளியிட்ட தகவலில்
கடந்த சில நாட்களாக ஒரு போதை மருந்து கயவனோடு என்னை சம்மந்தப்படுத்தி சிறிதும் அடிப்படையற்ற.. 100 சதவீதம் பொய்யான தகவல்களைப் பரப்பி வந்த சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது கிர்மினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன். ஆதாரங்களுடன் கோர்ட்டிற்கு வரவும். காலமும் கோர்ட்டும் உண்மையை தீர்மானிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட குறதறவாளிகள் முழுமையாக சிக்குவது விரைவில் உறுதி எனப் பேசப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் மன்னன் என அறியப்படும் ஜாபர் சாதிக், NCB யால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜெய்ப்பூரில் ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் முன்னதாக திமுகவில் அயலாக அணியில் நிர்வாகியாக இருந்ததால் திமுகவிற்கு இந்த விஷயம் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் நாடு முழுவதும் திமுகவின் மீது எக்கச்சக்கமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.அந்த வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்த விவரங்களை எடுத்து கூறி இருக்கிறார் சட்டம் நீதி சார்ந்த மாநில அமைச்சர் இரகுபதி. இது குறித்து அவர் பேசியபோது, போதை பொருள் விவகாரத்தில் திமுகவை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தி அதிலிருந்து அரசியல் லாபம் அடையமுடியும் என பாஜக தப்புக் கணக்கு போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, திமுகவை களங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எடுபடாது. 'INDIA' கூட்டணி உருவாவதில் திமுகவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. அதனால் தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என பாஜக தப்பு கணக்குப் போடுவதாகவும் அதற்கு அதிமுக துணை போவதாகவும் அமைச்சர் இரகுபதி கூறியுள்ளார். வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை களமிறக்கிய பாஜக, திமுகவை களங்கப்படுத்த போதை பொருள் தடுப்பு பிரிவை (NCB) களமிறக்கியுள்ளது. திமுகவை என்சிபிஐ வைத்து மிரட்டி பார்க்கலாம் என பாஜக எண்ணுகிறது. தமிழக அரசியலை புரட்டிப் பார்த்தால், அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்கள் துணையாக இருந்தது தெரியவரும். முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வீட்டில், எந்தெந்த அமைச்சருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் அடங்கிய பேப்பர் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாபர் சாதிக் விவகாரத்தைப் பொறுத்தவரையில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜாஃபர் சாதிக்கைக் காணவில்லை என 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் மங்கை படத்தின் விழாவில் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அவர் கலந்து கொண்டார். அப்போது என்சிபி எங்கே போனது ? எனவும் வினா எழுப்பியுள்ளார் மாநில சட்டம், நீதித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இது போக மறலும் பாஜக சார்பில் "ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமான் என்ற தி மு கவின் சென்னை மேற்கு அயலகப்பிரிவின் தலைவர், இந்தியா, நியூஸிலாந்து,ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் உட்பட சர்வேதச அளவில் போதை பொருள் தடுப்பில் ஈடுபட்ட காரணத்தால் போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. இந்த நபர் போதை ப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை திரைப்படம், கட்டுமானம், விருந்தோம்பல் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாக ஜாஃபர் சாதிக் கூறியிருப்பது அனைத்து நாடுகளின் காவல்துறையின் துணையோடு இந்த நபரின் முழுமையான குற்றங்களையும் கண்டுபிடிப்போம். இந்தப் போதைப் பொருள் கடத்தலின் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் 'மங்கை' என்ற திரைப்படத்தைத் தயாரித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் முதலீடு செய்ததாகவும், தமிழ் திரைப்படத் துறையில் பல்வேறு பிரமுகர்கள் இந்த முதலீடுகளில் தொடர்புடையவர்கள் என்றும், சில ஹோட்டல்களை சென்னையில் இந்த போதைப் பொருள் வருமானம் மூலம் அமைத்துள்ளதாவும் கூறியுள்ளார்" :- போதை பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குனர்.
இதை விட கேவலம் தி மு க விற்கு தேவையா? மத்திய புலனாய்வு நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமிழக அரசு ஜாஃபர் சாதிக் அப்துல் ரகுமானுடன் தொடர்பில் இருந்த, இருக்கிற சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் உடன் கைது செய்து விசாரிக்க வேண்டும். இல்லையேல், தி மு க அரசு இந்த கேவலமான, கேடுகெட்ட இழி செயலுக்கு உடந்தையாக உள்ளதாகவே கருதப்படும். இனி நாடகம் தேவையில்லை. குற்றவாளிகளைத் தண்டிக்க தி மு க அரசு தவறினால், மத்திய புலனாய்வு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புடைய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்ந்து செய்லபட வேண்டும். போதைப் பொருள் சமூகத்தை, அடுத்த தலைமுறையை நாசாமக்கும் என்பதை புரிந்து கொண்டு மத்திய நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையேல், தமிழக மக்களின் கடும் வெறுப்பை, விரோதத்தை தி மு க சந்திக்கும் என எச்சரிக்கிறேன்! என பாஜக செய்தித்தொடர்பாளர்
நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்