தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளில் இருந்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளில் இருந்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வழக்கமான ஏற்பாடுகள் செய்யும் வரை, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பணிப் பொறுப்புகளை, தமது பணிகளுடன் கூடுதலாக நிறைவேற்ற ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணனை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்.
அவரது நியமனம், அவர் இந்தப் பொறுப்புகளை ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வரும்.
கருத்துகள்