மூன்று நாள் பயணமாக மார்ச் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, சேலத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அடுத்த நாள் 16 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறார். வரும் 18 ஆம் தேதி கோயமுத்தூரில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பவர், அன்றே திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பேசுகிறார். மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு , கேரளம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதிமுகவுக்கு கோயமுத்தூர் மண்டலத்தில் கொங்குநாடு பகுதியில் பெரிய அளவு வாக்கு வங்கிகள் உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கவனம் கொங்கு மண்டலப் பகுதிகளில்தான் உள்ளது. பல்லடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூட டாக்டர் எம்ஜிஆர், செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பெயருக்கு புகழாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இவையெல்லாம் அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியாகத் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரப் பார்வையாளர்கள் இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை அமைகிறது.
கருத்துகள்