நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலாமானர்.
48 வயதான டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர். நெஞ்சுவலி ஏற்பட்டு கொட்டி வாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, பிகில், வட சென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினராவார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.1975 ஆம் ஆண்டு பிறந்த டேனியல் பாலாஜி, சென்னை தரமணியில் திரைப்பட இயக்கப் படிப்பை முடித்தார். கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக டேனியல் பாலாஜி தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ராதிகா நடிப்பில் பிரபலமான சின்னத்திரை தொடரான 'சித்தி' டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவரது பெயர் டேனியல் பாலாஜி ஆனது. சென்னை புரசைவாக்கத்துக்காரர். திருவான்மியூரில் வசித்து வந்தார்.
'சித்தி' சீரியலில் 'டேனியல்' என்ற முரட்டுப் பாத்திரத்தில் என்ட்ரீ ஆகி சினிமாவில் 'டேனியல்' பாலாஜி ஆனார்.
பைரவா, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு ன்னு அட்டகாசமான நடிப்புல ஆள், தனியாகத் தெரிவார்.
கொரோனாவுக்கு பிந்தைய மரணத் தகவல்கள் எல்லாமே திடீர் மாரடைப்பு என்பதாகவே இருக்கிறது.
கருத்துகள்